தரமில்லாத ஆட்டிறைச்சி என்றால் ஓட்டலுக்கு உடனே சீல் வைப்போம்: வனஜா, உணவு பாதுகாப்பு துறை கூடுதல் ஆணையர்

உணவு பாதுகாப்பு துறை சார்பில் அவ்வப்போது இறைச்சி கடைகளுக்கு சென்று ஆய்வு செய்கிறோம். உணவு பொருட்களில் கலப்படம் இருக்கிறதா, உணவுப்பொருட்கள் காலாவதி தேதியை தாண்டி விற்பனை செய்யப்படுகிறதா என்பது உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகளை செய்கிறோம். உணவு பாதுகாப்பு துறை விதிகள் முறையாக பின்பற்றப்படவில்லை என்றால் அந்த உணவுப் பொருட்கள் உடனே  பறிமுதல் செய்யப்படும். . உணவுப்பொருட்களின் தரம் சரியில்லை என்றால், உடனே உணவு பாதுகாப்பு துறை வாட்ஸ் அப் நம்பருக்கு  போன் செய்கின்றனர். குறுஞ்செய்தி, படங்களும் அனுப்புகின்றனர். உணவு பொருட்கள் சம்பந்தமாக வரும் புகாரின் பேரில் உணவு பாதுகாப்பு தொடர்பாக 24 மணி நேரத்திற்குள் ஆய்வு செய்கிறோம். அந்த ஆய்வில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஆய்வறிக்கையை அளிப்போம். கடந்த 2 வருடமாக பொதுமக்களிடம் இருந்து வாட்ஸ் அப் மூலம் வரும் புகார்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஒரு ஓட்டலுக்கு சென்று சாப்பிடும் போது, அந்த சாப்பாடு தரம் இல்லை என்று தெரிந்தாலே உடனடியாக அங்கிருந்தே போட்டோவாகவும், வீடியோவாகவும் பொதுமக்கள் எடுத்து எங்களுக்கு அனுப்பலாம். பொதுமக்களிடம் வரும் புகாரின் பேரில் அந்த உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகிறது. அதன்பிறகு அந்த ஓட்டல்களுக்கு சீல் வைப்பது, அபராதம் வசூலிப்பது என்று அடுத்தடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.

 ஜோத்பூரில் இருந்து ரயில் மூலம் கொண்டு வரப்பட்ட ஆட்டிறைச்சி உணவு பாதுகாப்பு துறையின் விதிகளை பின்பற்றி கொண்டு வரப்படவில்லை. அதாவது இறைச்சி கூடத்தில் வெட்டி, முத்திரை வாங்க வேண்டும். அந்த முத்திரை ஆட்டின் தொடையில் போடப்படுகிறது. அதுமட்டுமின்றி ஆட்டுக்கறியை வெட்டிய இடத்தில் இருந்து கொண்டு வரும் போது - 8 டிகிரி நிலையில் தான் இருக்க வேண்டும். அந்த ஆட்டுக்கறியை கொண்டு வந்த பிறகு 4 மணி நேரத்தில் விற்று விட வேண்டும். இல்லையெனில் அந்த ஆட்டு இறைச்சிக்கறியை பிரிட்ஜில் பாதுகாப்பாக வைக்க வேண்டும். அப்படி வைக்கப்படவில்லை எனில் அந்த ஆட்டு இறைச்சி மனிதர்கள் சாப்பிடுவதற்கு உகந்த நிலையில் இல்லாத அளவுக்கு போய் விடும். அப்படி ஜோத்பூரில் இருந்து கொண்டு வரும் ஆட்டிறைச்சி இருந்ததால் தான் நாங்கள் அந்த ஆட்டிறைச்சியை அழித்து விட்டோம்.

 நாங்கள் தவறாக ஆட்டிறைச்சியை அழித்ததாக சிலர் குறை கூறுவது தவறு. சமைக்காத மாமிசத்தை கொண்டு வரக்கூடாது. பாதுகாப்பாக வைத்து கொண்டு வரப்படும் இறைச்சிகளை கொண்டு செல்ல அனுமதிக்கப்படுகிறது. ஆனால், ஏனோ, தானோவென்று எந்தவொரு பாதுகாப்பும் செய்யாமல் ஆட்டிறைச்சியை கொண்டு வந்தால், அதை நாங்கள் அனுமதிப்பதில்லை. அதுவும் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்காமல் 3 நாட்களுக்கு மேலாக ஒரு ஆட்டிறைச்சியை கொண்டு வருவதை அழிக்கத்தான் செய்ய முடியும். அப்படி கொண்டு வரும் பொருளை சாப்பிட்டால் உடலுக்கு கேடு தான் வரும் நாங்கள் உணவு பாதுகாப்பு விதிகளை பின்பற்றி தான் இறைச்சியை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டோம். இது போன்று சமைக்காத மாமிசம் உள்ளிட்ட உணவு பொருட்களில் தரமில்லை என்றால் 9444042322 என்ற எண்ணுக்கு பொதுமக்கள் புகார்களை பதிவு செய்யலாம். ஆட்டுக்கறியை கொண்டு வந்த பிறகு 4 மணி நேரத்தில் விற்று விட வேண்டும். இல்லையெனில் அந்த ஆட்டு இறைச்சியை பிரிட்ஜில் பாதுகாப்பாக வைக்க வேண்டும்

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: