சாப்பாட்டு பிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சி தமிழகத்தை அச்சுறுத்தும் உணவு கலப்படம்

நாய்க்கறி விவகாரம் சமீபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  கடைசியில் ஆட்டிறைச்சி என்று ஆய்வில் தெரியவந்ததும் பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. உண்மையில் உணவுக் கலப்படம்  என்பது  இந்தியாவில் எங்கும் பரவிக்கிடப்பது தான். மத்திய அரசு, உணவு  பாதுகாப்பு தரக்கட்டுப்பாட்டு ஆணையத்தை அமைத்து நடவடிக்கை எடுத்து வருகிறது; மாநிலங்களிலும் அதற்கு தனித்துறை உள்ளது. தமிழக உணவு பாதுகாப்பு துறை  எவ்வளவோ நடவடிக்கை எடுத்தாலும்,  கலப்படம் பரவிக்கொண்டே தான் இருக்கிறது.

அவ்வப்போது  அரிசி,  பருப்பு  முதல் துவங்கி பல உணவுப்பொருட்களிலும் கலப்படம் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட உணவுப்பொருட்களில் மட்டுமல்ல, அசைவ உணவுகளில் கலப்படம்  பரவி  கிடக்கிறது என்ற குற்றச்சாட்டு எழாமல் இல்லை. போதுமான சுகாதார பாதுகாப்பு, தரம் பின்பற்றப்படுவதில்லை என்று சொன்னாலும், இந்த அளவுக்கு கலப்படம் தலைதூக்க சில அதிகாரிகளும் கூட உடந்தை  என்று அசைவ பிரியர்கள் தரப்பில் கூறப்படுகிறது. ‘நாங்கள் தரத்துடன் தான் தயாரித்து தருகிறோம்.  வாடிக்கையாளர்கள் உடல்நலனில் எங்களுக்கு அக்கறை இருக்காதா என்று கேட்கின்றனர் ஓட்டல்

சங்கத்தினர்.  

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: