ராயல் என்பீல்டு தண்டர்பேர்டு 500 எக்ஸ் ஏபிஎஸ்

ராயல் என்பீல்டு தண்டர்பேர்டு 500 எக்ஸ் மோட்டார் சைக்கிளின் ஏபிஎஸ் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடலுக்கு அனைத்து ராயல் என்பீல்டு டீலர்களிடமும் முன்பதிவு  செய்யப்படுகிறது. ₹5 ஆயிரம் முன்பணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த பைக்கில், டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இதனால், கூடுதல் பாதுகாப்பு வசதி பெற்ற மாடலாக மாறி  இருக்கிறது. இந்த ஏபிஎஸ் மாடலில் 499 சிசி ஏர்கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 27 பிஎச்பி பவரையும், 41 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ்  இணைக்கப்பட்டுள்ளது.

இதன் முன்புறத்தில் 41 மி.மீ டெலிஸ்கோப்பிக் போர்க்குகளும், பின்புறத்தில் கேஸ் சார்ஜ்டு இரட்டை ஷாக் அப்சார்பர்களும் பொருத்தப்பட்டுள்ளன. பின்புற ஷாக் அப்சார்பரை 5 நிலைகளில் மாற்றிக்கொள்ளும் வசதியும் உள்ளது.  இந்த மோட்டார் சைக்கிளில் அலாய் வீல்கள் மற்றும் ட்யூப்லெஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. முன்புறத்தில் 19 அங்குல டயரும், பின்புறத்தில் 18 அங்குல டயரும் பொருத்தப்பட்டுள்ளன. முன்சக்கரத்தில் 280 மி.மீ டிஸ்க்  பிரேக்கும், பின்சக்கரத்தில் 240 மி.மீ டிஸ்க் பிரேக்கும் கொடுக்கப்பட்டுள்ளன. டிரிப்டர் புளூ மற்றும் கெட் அவே ஆரஞ்ச் ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது. பிளாட் ஹேண்டில்பார் அமைப்பு, பிளவுபட்ட கிராப் ரெயில்  கைப்பிடிகள், சிறப்பான ரைடிங் பொசிஷன் ஆகியவை இதன் முக்கிய அம்சங்களாக உள்ளன. இப்புதிய ஏபிஎஸ் மாடலுக்கு ₹2.60 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்புதிய மோட்டார் சைக்கிள், பாதுகாப்பு  விஷயத்தில் நிச்சயம் வரவேற்கத்தக்க மாடலாக உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: