வருகிறது மஹிந்திரா அல்டுராஸ்

புதிய தலைமுறை மாடலாக அறிமுகம் செய்யப்பட்ட சாங்யாங் ரெக்ஸ்டன் எஸ்யூவி ரக கார், இந்தியாவில் மஹிந்திரா பிராண்டில் வர இருக்கிறது. இதுவரை மஹிந்திரா ஒய்-400 அல்லது எக்ஸ்யூவி-700 என்ற பெயர்களில்  குறிப்பிடப்பட்டு வந்த இந்த எஸ்யூவி ரக கார், அல்டுராஸ் என்ற பெயரில் வர இருக்கிறது. வரும் 24.11.2018 அன்று இப்புதிய எஸ்யூவி ரக காரை முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்ய மஹிந்திரா முடிவு செய்துள்ளது.  இப்புதிய எஸ்யூவி ரக கார், போட்டியாளர்களைவிட மிக சவாலான விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் ரக சந்தையில், முன்னிலை வகிக்கும் டொயோட்டா பார்ச்சூனர் மற்றும் அடுத்த இடத்தில் உள்ள போர்டு எண்டெவர்  எஸ்யூவி ரக மாடல்களைவிட இந்த எஸ்யூவி ரக மாடல் ₹4 லட்சம் வரை குறைவான ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, ₹23 லட்சம் ஆரம்ப விலையில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்புதிய  மஹிந்திரா அல்டுராஸ் காரில் 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 184 பிஎச்பி பவரையும், 420 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது.  இப்புதிய  மஹிந்திரா அல்டுராஸ் எஸ்யூவி ரக கார், இரண்டு வேரியண்ட்டுகளில் வர இருக்கிறது. விலை குறைவான வேரியண்ட் G2 என்ற பெயரிலும், விலை உயர்ந்த வேரியண்ட் G4 என்ற வேரியண்ட்டிலும் வருகிறது. இதில், G2  என்பது 2 வீல் டிரைவ் சிஸ்டம் மாடலாகவும், G4 என்பது 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட மாடலாகவும் இருக்கும்.  இப்புதிய கார், 7 சீட்டர் மாடலாக வர இருக்கிறது. இந்த கார், சிறப்பம்சங்களிலும், பாதுகாப்பு வசதிகளிலும் மிகச்சிறப்பான மாடலாக இருக்கும். போட்டியாளர்களைவிட அதிக தொழில்நுட்ப சிறப்பம்சங்களை ெகாண்டதாக  இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: