எஞ்சின் இல்லாத டிரெயின் 18 ரயிலின் முதல் வெள்ளோட்டம் நாளை பரேய்லி - மொரதாபாத் இடையே நடைபெற உள்ளது

உத்தரப் பிரதேசம்: இந்தியாவில் எஞ்சின் இல்லாத டிரெயின் 18 ரயிலின் முதல் வெள்ளோட்டம் உத்தரப் பிரதேசத்தின் பரேய்லி - மொரதாபாத் இடையே நாளை நடைபெற உள்ளது. சென்னை பெரம்பூர் ரயில்பெட்டித் தொழிற்சாலையில் முதன்முறையாக எஞ்சின் இல்லாத டிரெயின் 18 என்கிற ரயில் தயாரிக்கப்பட்டுள்ளது. 16 பெட்டிகள் கொண்ட எஞ்சின் இல்லாத ரயிலைச் சென்னை பெரம்பூர் ரயில்பெட்டி தொழிற்சாலை தயாரித்துள்ளது. முப்பதாண்டுகளாக நாட்டின் பல பகுதிகளில் ஓடும் சதாப்தி ரயில்கள் மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்தில் ஓடுபவை. ஆனால் புதிதாகத் தயாரிக்கப்பட்டுள்ள எஞ்சின் இல்லாத ரயில் மணிக்கு 160 கிலோமிட்டர் வேகத்தில் ஓடும் திறன்பெற்றது.

மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும் திறன்பெற்ற இந்த ரயில் தண்டவாளத்தில் இயக்கி வெள்ளோட்டம் பார்ப்பதற்காக ஆராய்ச்சி வடிவமைப்பு தர நிறுவனத்திடம் கடந்த மாத இறுதியில் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தில் பரேய்லி - மொரதாபாத் இடையில் உள்ள தண்டவாளத்தில் இந்த ரயிலை இயக்கி நாளை வெள்ளோட்டம் பார்க்க உள்ளனர். இப்போதுள்ள தண்டவாளங்கள் இதற்குப் பொருந்தினால் சதாப்தி ரயில்களில் செல்வதைவிட இவ்வகை ரயில்களில் பயணநேரம் 15 விழுக்காடு அளவுக்குக் குறையும் எனக் கூறப்படுகிறது. இந்த ரயில் நிலையத்தில் நிற்கும்போது தானியங்கிக் கதவுகள் திறக்கும். ரயில் புறப்படுமுன் கதவுகள் மூடிக்கொள்ளும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: