கேரளாவில் மின்சார பஸ்

திருவனந்தபுரம்: தென்னிந்தியாவிலேயே முதல் முறையாக கேரள அரசு போக்குவரத்துக் கழகத்தில் மின்சார பஸ்சை  நேற்று மாநில போக்குவரத்து துறை அமைச்சர் சசீந்திரன் புதிய பஸ்சை தொடங்கி வைத்தார். இந்த மின்சார பஸ்சின் விலை ரூ.2 கோடியாகும். 33 இருக்கைகள் கொண்டது. அதிகபட்சமாக 120 கி.மீ. வேகம் செல்லும்.

ஒரு கி.மீ. தூரம் இயக்க ரூ.4 செலவாகும். சாதாரண பஸ்சுக்கு ரூ.31 ஆகும். மின்சார பஸ்சில் ஒருமுறை சார்ஜ் செய்தால் 250 கி.மீ. ஓடும். கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களில் சோதனை அடிப்படையில் இந்த மின்சார பஸ்கள் இயக்கப்பட்டாலும் கேரளாவில் தான் முதல் முறையாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: