பழைய நிலையே தொடர வேண்டும் நேஷனல் ஹெரால்ட் வழக்கில் டெல்லி ஐகோர்ட் உத்தரவு

புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு கட்டிட குத்தகை வழக்கில் ஏற்கனவே உள்ள நிலையே வரும் 22ம் தேதி வரை பின்பற்றுவதாக, டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு தொடங்கிய பத்திரிக்கை ‘நேஷனல் ஹெரால்டு’. இந்த பத்திரிக்கையை ஏஜெஎல் என்ற நிறுவனம் வெளியிட்டு வந்தது. இதற்காக டெல்லி ஐடிஓ பகுதியில் உள்ள ‘பிரஸ் என்கிளேவ்’ வளாகத்தில் உள்ள அரசு கட்டிடம் 56 ஆண்டுகள் குத்தகைக்கு எடுக்கப்பட்டிருந்தது. குத்ததை காலம் முடிந்ததை தொடர்ந்து, கட்டிடத்தை காலி செய்யும்படி ஏஜெல் நிறுவனத்துக்கு மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை கடந்த அக்டோபர் 30ம் தேதி உத்தரவு பிறப்பித்தது. அதில், ‘இந்த இடத்தில் கடந்த 10 ஆண்டுகளாக பத்திரிக்கை அச்சிடும் பணி எதுவும் நடைபெறவில்லை.

ஒப்பந்த விதிகளை மீறி வர்த்தக நோக்கத்தில் இந்த கட்டிடம் பயன்படுத்தப்படுகிறது. எனவே, கட்டிடத்தை உடனடியாக காலி செய்ய வேண்்டும்’ என கூறியிருந்தது. இந்த உத்தரவு சட்ட விரோதமானது என டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஏஜெஎல் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இதன் விசாரணை நீதிபதி சுனில் கவுர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை மற்றொரு நாள் விசாரிக்கலாம் என கூறி 22ம் தேதிக்கு ஒத்திவைத்தார். அதுவரை ஏற்கனவே உள்ள நிலையை மத்திய அரசு பின்பற்றலாம் என உத்தரவிட்டார். இதையடுத்து, நேஷனல் ஹெரால்ட் கட்டிட குத்தகை வழக்கில் ஏற்கனவே உள்ள நிலையே பின்பற்றுவதாக மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தார் உறுதி அளித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: