எனக்கு புகழ் போதும் இனி தமிழகத்துக்கு புகழ் சேர்ப்பேன் : கமல் பேச்சு

சென்னை: குழந்தைகள் தினத்தையொட்டி நேற்று சென்னை லிட்டில் பிளவர் பார்வையற்றோர் பள்ளியில் நடந்த விழாவில் மக்கள் நீதி மய்யம்  தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது: குழந்தைகள் தின விழாவில் நான் குழந்தைகளை வாழ்த்த வரவில்லை.  அவர்களிடம் வாழ்த்து பெற வந்திருக்கிறேன். குழந்தைகள் பாடிய பாடல் எனக்கு தெம்பு தருவதாக இருந்தது. நான் செல்லும் பாதையும், பயணமும்  இன்னும் வேகமாக இருக்க வேண்டும் என்று சொல்வதாக இருந்தது. 32 வருடங்களுக்கு முன்பு நானும் இந்த பள்ளியில் பாடம் படித்திருக்கிறேன்.  ராஜபார்வை படத்தில் பார்வையற்றவனாக நடிப்பதற்கு பிரெய்லி எழுத்தையும், சைகை மொழியையும் கற்றேன். அதன் மூலம் நான் ஞானம் பெற்றேன்.

இந்த பள்ளிக்கு பிரெய்லி மொழியில் பயன்படுத்தும் கம்ப்யூட்டரும், பிரின்டரும் வேண்டும் என்று ஒரு மாணவி என்னிடம் கேட்டார். அது மும்பையில்  இருந்து வரவழைக்க வேண்டும் என்றார்கள். நிச்சயம் அதை நான் என் சக்திக்கேற்ப வாங்கி தருவேன். எனக்கு மக்கள் கொடுத்த புகழ் போதும்.  தேவைக்கு அதிகமாகவும், தகுதிக்கு அதிகமாகவும் கொடுத்து விட்டார்கள். இனி நான் தமிழுக்கு புகழ் சேர்க்கும் வேலையை செய்ய இருக்கிறேன்.  தமிழ்மொழி, கலாச்சாரம் என்று இல்லாமல் உலகளாவிய தமிழ் குலத்துக்கு புகழ் சேர்க்கும் பணிகளை செய்வேன் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: