திருவில்லி.வனத்துறை அலுவலகத்தை அலங்கரிக்கும் வனவிலங்கு சிற்பங்கள்

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூரில் மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் சுற்றுச்சுவரை பறவைகள் மற்றும் வனவிலங்குகளின் ஓவியத்தால் அலங்கரித்துள்ளனர். இந்த சிற்பங்கள் காண்போரை கவரும் வகையில் உள்ளது. திருவில்லிபுத்தூரில் உள்ள தேசியநெடுஞ்சாலையில் விருதுநகர் மாவட்ட வனத்துறை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் சுற்றுச்சுவர்களில் பறவைகள் மற்றும் விலங்கினங்களின் சிற்பங்களை சிமெண்டால் கேரள தொழிலாளர்கள் வடிவமைத்துள்ளனர். அலுவலக நுழைவுப் பகுதியில் இரண்டு சாம்பல் நிற அணில்களின் உருவமும், சுற்றுச்சுவரில் காட்டெருமை, மான், இருவாச்சி பறவை, கொக்கு, தேவாங்கு, வரையாடு மற்றும் காட்டுப்புறா ஆகியவை தத்ரூபமாக வடிவமக்கப்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகளின் பல்வேறு வானங்களில் செல்லுபவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உள்ளது. வாகன ஓட்டிகள், தங்களது வாகனங்களை நிறுத்தி, வனவிலங்குகளின் சிற்பங்களை படம் எடுக்கின்றனர். மேலும், செல்பி எடுத்துச் செல்கின்றனர். இது குறித்து அந்த பகுதியில் வசிக்கும் ஒருவர் கூறுகையில், ‘மாவட்ட வனத்துறை அலுவலகத்தில், புதிய மாவட்ட வன அதிகாரி பொறுப்பேற்ற பின்னர், இந்த அலுவலகமும், சுற்றுச்சுவர்களில் வனவிலங்குகள் மற்றும் பறவைகளை சிற்பமாக வடித்துள்ளனர். வனத்துறை அலுவலகம் அருங்காட்சியமாக திகழ்கிறது’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: