திருவாரூர் பாதுகாப்பு மையத்தில் உள்ள சிலைகள் ஆய்வு... 3-வது கட்ட ஆய்வில் 50 பேர் பங்கேற்பு

திருவாரூர்: திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலின் பாதுகாப்பு மையத்தில் உள்ள சிலைகளின் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்யும் பணி மூன்றாம் கட்டமாக நடைபெற்று வருகிறது. தியாகராஜ சுவாமி ஆலயத்தில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில் இருந்து வெளியே கொண்டு செல்லப்படும் சுவாமி சிலைகள் மாற்றப்பட்டு போலி சிலைகள் வைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. இதையடுத்து அங்கு இரண்டு கட்டங்களாக 504 சிலைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

தஞ்சாவூர், நாக்கால், திருவாரூர், கடலூர், விழுப்புரம், ஆகிய மாவட்டங்களில் உள்ள விலைமதிப்புள்ள கோயில் சிலைகள் தியாகராஜர் கோயில் திருமேனி பாதுகாப்பு மைதானத்தில் வைக்கப்பட்டுள்ளன. 625 கோயில்களை சேர்ந்த 4365 சிலைகளின் உண்மைத்தன்மை குறித்து ஆய்வு பணி ஏற்கனவே இரண்டு கட்டமாக நிறைவுபெற்றது. தற்போது 3-ம் கட்டமாக சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும், தொல்லியல் துறையினரும் இணைந்து மொத்தம் 50 பேர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

இதில் சிலைகளின் எடை, அவற்றின் தன்மைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த பணி அடுத்த 3 நாட்களுக்கு நடைபெறும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: