கோவை அருகே ஊருக்குள் புகுந்து நடமாடும் காட்டு யானைகளை விரட்டும் பணி தீவிரம்

பெ,நா.பாளையம்: கோவை அருகே ஊருக்குள் புகுந்து நடமாடும் 2 காட்டு யானைகளை விரட்டும் பணி தீவிரமாக நடக்கிறது. கோவை அருகே உள்ள தடாகம், ஆனைகட்டி, மாங்கரை, பன்னிமடை சுற்றியுள்ள வனத்திலிருந்து வெளியறும் இரண்டு காட்டு யானைகள் கடந்த சில மாதங்களாக இரவு நேரத்தில் ஊருக்குள் புகுந்து நடமாடுவதால் மக்கள் அச்சமடைந்தனர். இந்நிலையில் யானையை விரட்டும் பணியின் போது வெங்கடேஷ் என்ற வேட்டை தடுப்பு காவலர் யானையிடம் சிக்கி சில நாட்களுக்கு முன்பு இறந்தார்.

எனவே 2 யானைகளையும் வனத்திற்குள் விரட்ட நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு முகாமிலிருந்து ஜான், சேரன், பொம்மன், விஜய் ஆகிய 4 கும்கி யானை கோவை சாடி வயல் முகாமிற்கு கடந்த 10ம் தேதி கொண்டு வரப்பட்டன. பிறகு ஜான், சேரன் ஆகிய கும்கி யானைகள் தடாகம் அருகே வரப்பாளையம்  கொண்டு செல்லப்பட்டு யானைகளை விரட்டும் பணி நடந்தது. இந்நிலையில் சாடி வயலில் இருந்த பொம்மன் மற்றும், விஜய் ஆகிய 2 கும்கி யானைகள் நேற்று வரப்பாளையம் கொண்டு வரப்பட்டது. இந்த 4 கும்கி யானைகள் மூலம் 2 காட்டு யானைகளையும் அடர் வனத்திற்குள் விரட்டியடிக்க வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: