பட்டாசு தொழிலை பாதுகாக்க வேண்டும் டிடிவி.தினகரன் வலியுறுத்தல்

சென்னை: உரிய சட்டநடைமுறைகளை பின்பற்றி பட்டாசு தொழிலை பாதுகாக்க ேவண்டும் என்று டிடிவி.தினகரன் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக, அமமுக துணை பொது செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்ட அறிக்கை:விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள், சுப்ரீம் கோர்ட் விதித்த கடுமையான நிபந்தனைகளின் எதிரொலியாக காலவரையின்றி மூடப்படுவதாக அறிவித்துள்ளது.

இதனால், சுமார் 8 லட்சம் தொழிலாளர்களும் வேலை இழந்துள்ள அவலம் ஏற்பட்டுள்ளது மிகுந்த வேதனை அளிக்கக்கூடிய செய்தி. குட்டி ஜப்பான் என்றழைக்கப்படும் சிவகாசி நகரம் முடங்கியே போகும் நிலை ஏற்பட்டுள்ளது.தமிழக கலாச்சார அடையாளங்களில் ஒன்றாகவும், லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமாகவும் திகழும் பட்டாசு தொழிலை பாதுகாக்க உரிய சட்ட நடைமுறைகளை பின்பற்றி அவர்களுக்கான உரிய தீர்வை பெற்றுத்தர வேண்டும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: