ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையத்தில் ஆஜராவோர் பின்புலம் அறிய இன்ஸ்பெக்டர் நியமனம்: தமிழக அரசு ஒப்புதலை தொடர்ந்து டிஜிபி உத்தரவு

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஆணையத்தில் விசாரணைக்கு ஆஜராகுபவர்களின் பின்புலங்களை அறிய இன்ஸ்பெக்டர் ஒருவரை நியமிக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தின் சார்பில் 107 பேரிடம் இதுவரை நீதிபதி ஆறுமுகச்சாமி விசாரணை நடத்தியுள்ளார். இன்னும் பலரிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. இந்த நிலையில், ஆணையத்திற்கு 4 மாதம் கால அவகாசம் கேட்டு தமிழக அரசுக்கு கடிதம் எழுதியது. அந்த கடிதத்தில், கடந்த ஜூலை மாதம் தமிழக அரசுக்கு எழுதிய கடிதத்தில் காவல் ஆய்வாளர் நியமிக்க வலியுறுத்தி இருந்தும் இன்னும் நியமிக்கப்படவில்லை. விசாரணைக்கு ஆஜராகுபவர்களின் பின்புலங்களை ஆணையம் தெரிந்து கொள்வதற்கும், சில சாட்சிகளை விசாரிப்பதற்கும் காவல் ஆய்வாளர் தேவைப்படுகிறது என்று அந்த கடிதத்தில் ஆணையம் கூறியிருந்தது.

இந்த சூழலில் விசாரணைக்கு ஆஜராகுபவர்கள் அளித்த வாக்குமூலத்தில் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து நடந்த நிகழ்வுகளில் தொடர்புடையவர்கள் என பல பெயர்களை ஆணையம் அடையாளம் கண்டுபிடித்துள்ளது. போயஸ் கார்டனில் பணிபுரிந்தவர்களின் முழு விபரங்களை இன்னும் ஜெயலலிதா உதவியாளராக இருந்த பூங்குன்றன் தெரிவிக்கவில்லை.குறிப்பாக போயஸ் கார்டனில் செப்டம்பர் 22 ம் தேதி முதல் தளத்தில் இருந்த இரண்டு பணிப்பெண்கள் யார் அவர்கள் தற்போது எங்கு இருக்கிறார்கள் என்ற விவரங்கள்ஆணையத்திற்கு கிடைக்கவில்லை பணிப்பெண்களுக்கு சம்மன் அனுப்ப அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதை விசாரிப்பதற்கு காவல் ஆய்வாளர் தேவை என்று ஆணையம் கருதியது. இந்த நிலையில் இன்ஸ்பெக்டரை நியமனம் செய்ய தமிழக அரசு ஓப்புதல் அளித்து இது தொடர்பாக டிஜிபி டி.கே. ராஜேந்திரனுக்கு கடிதம் எழுதியது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஒருவரை நியமனம் செய்திருப்பதாக ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: