சார்பதிவாளர்கள் அலுவலகத்தில் லஞ்சம் கேட்டால் நடவடிக்கை

சென்னை: பதிவு செய்யப்படும் ஆவணங்களுக்கு டிஐஜி அலுவலக பெயரை பயன்படுத்தி சார்பதிவாளர்கள் அலுவலகத்தில் லஞ்சம் கேட்பதாக டிஐஜிக்கு புகார் வந்து இருப்பது பதிவுத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலக்தில் லஞ்சம் வாங்குவதாக தகவல் வந்தது. இதை தொடர்ந்து, பதிவுத்துறை மண்டல டிஐஜி ஒருவர் சார்பதிவாளர்களுக்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், அனைத்து மாவட்ட பதிவாளர்கள் மற்றும் பதிவு அலுவலர்கள் கவனத்திற்கு, எனக்கு பொதுமக்களிடம் இருந்து எனக்கு ஏராளமான புகார்கள் வந்துள்ளன.

அந்த புகாரில், சார்பதிவாளர்கள் அலுவலகத்தில் ஊழியர்கள் சிலர் டிஐஜி அலுவலகத்தில் செலவுக்காகத்தான் பணம் கேட்பதாக கூறி பொதுமக்களிடம் லஞ்சம் கேட்கின்றனர். இதுபோன்று பொதுமக்களிடம் பணம் வசூலிக்குமாறு எந்தவிதமான அறிவுரையும் வழங்கவில்லை. தொடர்ந்து இதுபோன்ற புகார்கள் வரும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரியும் பதிவு அலுவலர்கள், ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார். இந்த சம்பவம் பதிவுத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: