மலேசியாவுக்கு கடத்த முயற்சி திருச்சியில் 3.85 கோடி வெளிநாட்டு கரன்சி பறிமுதல்

திருச்சி: திருச்சியில் இருந்து மலேசியாவுக்கு கடத்த முயன்ற ஆமீர்3.85 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சியை அதிகாரிகள் பறிமுதல் ெசய்தனர்.திருச்சி  விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, துபாய், இலங்கை, சவுதி  அரேபியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், சென்னை, மும்பை உள்ளிட்ட  நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. அதேபோல்  இந்த நாடுகளில்  இருந்தும் விமானங்கள் வருகின்றன. சமீப காலமாக திருச்சி விமான நிலையத்தில்  கடத்தல் தங்கம் மற்றும் வெளிநாட்டுக் கரன்சிகள் பிடிபடுவது  அதிகரித்துள்ளது. இதனால் பயணிகளிடம் சோதனை  நடத்துவதும்  தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.நேற்றுமுன்தினம் இரவு திருச்சியில் இருந்து  மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு செல்லும் ஏர் ஏசியா விமான பயணிகளின் உடமைகளை  வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

இதில்  ஒரு பயணி தனது சூட்கேசின் அடிப்பகுதியில் ஜப்பான் நாட்டின் யென்,  அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகளின் டாலர்கள் உள்ளிட்ட கரன்சி நோட்டுகளை  மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக  அந்த நோட்டுகளை  அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். விசாரணையில் வெளிநாட்டு கரன்சிகளை  கடத்திச்செல்ல முயன்றவர் திருச்சியை சேர்ந்த ரியாஸ் அகமது(37) என்பது  தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட கரன்சிகளின் மதிப்பு ஆமீர்3.85 கோடியாகும். அவரிடம் தொடர்ந்து  விசாரித்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: