அயனாவரம் சிறுமி பலாத்கார வழக்கு கைதான 17 பேருக்கும் தனித்தனியாக வக்கீல்கள் ஆஜர்

சென்னை: சென்னை, அயனாவரம் அடுக்குமாடி குயிருப்பில்  வசித்து வந்த 11 வயது சிறுமியை. அதே குடியிருப்பில் வேலை செய்து வந்த லிப்ட் ஆபரேட்டர், வாட்டர் மேன், வாட்ச்மேன் என பலர் பல மாதங்களாக மிரட்டி  பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்படி அயனாவரம் மகளிர் காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து 17 பேரை கடந்த ஜூலை மாதம் கைது செய்தனர். இந்த சம்பவம் நாடும் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அனைவரும் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவையும் நீதிமன்றம்  தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், 17 பேர் மீதும் கடந்த மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து சென்னை, புழல் சிறையில் உள்ள 17 பேரும் கடந்த வாரம் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு அவர்களிடம் வழக்கு குறித்த  ஆவணங்கள் வழங்கப்பட்டன. இதைதொடர்ந்து, வழக்கு சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. குற்றவாளிகள் 17 பேரும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, குற்றம்  சாட்டப்பட்டுள்ள 17 பேருக்கும் தனி தனியாக வக்கீல்கள் ஆஜராகி, தாங்கள் எந்த நபருக்கு ஆஜராகிறோம் என்பதை பதிவு செய்தனர். இதையடுத்து நீதிபதி வழக்கை வரும் 27ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார். அன்றைய  தினம் அரசு வக்கீல் வழக்கின் விசாரணையை தொடங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் 17 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: