தர்மபுரி மாணவி பலியான விவகாரம் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை: தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் பேட்டி

சென்னை: தர்மபுரியில் பாலியல் துன்புறுத்தலில் மாணவி பலியான சம்பவத்தில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் கூறினார்.தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் அளித்த பேட்டி: தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே 12ம் வகுப்பு படிக்கும் மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார். தொடர்ந்து அவர் சிகிச்சை  பலனின்றி உயிரிழந்த செய்தி கேட்டு வருத்தமும், வேதனையும் அடைந்தேன். இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து மிகவும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என தமிழக அரசையும், காவல்  துறையினரையும் கேட்டுக்கொள்கிறேன்.

எனது அறிவுறுத்தலின்படி மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். மேலும் இதுபோன்று சமீபத்தில் நடந்த அனைத்து  நிகழ்வுகளை ஆய்வு செய்து அந்த முழு அறிக்கை மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய தலைவரிடம் இருந்து பெறப்பட்டுள்ளது. பிரதமர் ந கனவு திட்டமான “வீடுதோறும் கழிப்பறை” திட்டத்தை அனைத்து கிராமங்களிலும்  செயல்படுத்த வேண்டும். அதை சம்பந்தப்பட்ட நிர்வாகிகளும், மாவட்ட ஆட்சி தலைவர்களும் உறுதிப்படுத்த வேண்டும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: