வடதமிழகம் பாலைவனமாவதை தடுக்க பாலாற்றின் குறுக்கே 21 தடுப்பணைகளை கட்டும் ஆந்திர சதியை தமிழகம் முறியடிக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பாலாற்றில் 21 தடுப்பணைகள் கட்டும் அந்திர அரசின் திட்டத்தை தமிழக அரசு முறியடிக்க வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கூறினார்.இது குறித்து அன்புமணி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்தாவது: ஆந்திர அரசு கட்டுவதற்கு திட்டமிட்டுள்ள 21 தடுப்பணைகளும் அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் சொந்தத் தொகுதியான குப்பத்தில் தான்  அமையவுள்ளன. அத்தொகுதிக்குட்பட்ட குப்பம், ராம்குப்பம், சாந்திபுரம், வீகோட்டா ஆகிய  மண்டலங்களில் இந்த தடுப்பணைகள் கட்டப்படவுள்ளன. இதற்காகவும், ஏற்கனவே கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளை வலுப்படுத்தும்  பணிகளுக்காகவும் ஆந்திர அரசு ₹1.70 கோடியை ஒதுக்கியுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் வெறும் 33 கிலோ மீட்டர் தொலைவுக்கு மட்டுமே பாலாறு பயணிக்கும் நிலையில், அந்த ஆற்றின் குறுக்கே 22 இடங்களில் அம்மாநில அரசு தடுப்பணைக் கட்டியுள்ளது. அதுமட்டுமின்றி, ஏற்கனவே  கட்டப்பட்ட பல தடுப்பணைகளின் உயரத்தையும் 18 அடி உயரத்திற்கு உயர்த்தியிருக்கிறது. இதனால் பாலாற்றில் தமிழகத்திற்கு தண்ணீர் வருவது அரிதாகி, அந்த ஆறே பாலைவனமாக மாறிவிடும்.கடந்த சில ஆண்டுகளில் இந்த பணிகள் நடைபெற்ற போது தமிழகத்தில் முதல்வர்களாக ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகிய மூவருமே இதை வேடிக்கை மட்டும் தான் பார்த்துக் கொண்டிருந்தார்களே  தவிர, அவற்றை தடுத்து நிறுத்த ஆக்கப்பூர்வமாக எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.ஆந்திர மாநிலம் திட்டமிட்டபடி புதிய தடுப்பணைகளை கட்டி முடித்து விட்டால் அம்மாநிலத்தில் 33 கி.மீ மட்டுமே பாயும் பாலாற்றின் குறுக்கே 3 தடுப்பணைகள் இருக்கும். பாலாறு சார்ந்த விவகாரத்தில் இனியும் உறங்கிக்  கொண்டிருக்காமல், பாலாற்றில் தடுப்பணை கட்டும் ஆந்திர அரசின் சதித்திட்டத்தை தமிழக அரசு முறியடிக்க வேண்டும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: