கபாலீஸ்வரர் கோயிலில் 3 சிலைகள் மாயமானதை விசாரிக்க ராமேஸ்வரம் கோயில் இணை ஆணையர் நியமனம்: ஓய்வு பெற்ற ஊழியர்கள், அர்ச்சகர்களிடம் விசாரணை

சென்னை: கபாலீஸ்வரர் கோயிலில் 3 சிலைகள் மாயமான விவகாரம் தொடர்பாக, விசாரிக்க அறநிலையத்துறை சார்பில் ராமேஸ்வரம் கோயில் இணை ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர், ஓய்வு பெற்ற ஊழியர்கள்,  அர்ச்சகர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார். சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் கடந்த 200ல் கும்பாபிஷேகம் நடந்தது. இந்த திருப்பணியின்போது புன்னைவனநாதர், ராகு, கேது சிலைகள் சேதமடைந்திருப்பதாக கூறி மாற்றப்பட்டது. ஆகம விதிப்படி சேதமடைந்த  சிலைகளை பூஜை செய்து சன்னதிக்குள் புதைக்க வேண்டும். ஆனால், இந்த சிலைகள் கோயிலில் புதைக்கப்படாமல் கடத்தப்பட்டதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு புகார் வந்தது. அதன் பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில், கோயில் சிலைகள் எங்கே இருக்கிறது என்று தெரியாது என்று அப்போது துணை ஆணையராக இருந்த திருமகள்  உட்பட பலரும் சாட்சியம் அளித்தனர். மேலும், சிலர் புதிய சிலையை மாற்றிய உடன் பழைய சிலை நிர்வாகத்திடம் தான் ஒப்படைக்க வேண்டும்.

கோயில் நிர்வாகம் தான் சிலை புதைப்பது குறித்து முடிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர். இந்த விசாரணை ஒரு புறம் இருக்க அறநிலையத்துறை சார்பில் 3 சிலைகள் மாயமானது தொடர்பாக விசாரிக்க ராமேஸ்வரம்  கோயில் இணை ஆணையர் மங்கையர்கரசியை நியமனம் செய்து கமிஷனர் டி.கே.ராமச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். அவர், கடந்த 2 நாட்களாக கோயிலில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியர்கள், அர்ச்சகர்கள் சிலரை மட்டுமே அழைத்து விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. அவர்கள், 3 சிலைகளை மாற்ற வேண்டும் என்று கோயில் நிர்வாகம்  தான் முடிவு செய்தது.

 அதனால், நாங்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்ைல. கேரள நம்பூதிரிகளை அழைத்து பிரசன்னம் பார்க்கப்பட்டது. அதன்பிறகு கோயல் நிர்வாகமே சிலைகளை மாற்றியது. அந்த சிலைகள் ேகாயில் நிர்வாகம் வசம் தான்  இருந்தது. எங்களுக்கு அது பற்றி எதுவும் தெரியாது என்று கூறினர். இந்த விசாரணையில் ஊழியர்கள் அளித்த வாக்குமூலத்தை அறிக்கையாக இணை ஆணையர் மங்கையர்கரசி கமிஷனரிடம் தாக்கல் செய்யவுள்ளார். இந்த நிலையில் ஒரு சிலரிடம் மட்டுமே இணை ஆணையர் விசாரணை  நடத்தப்பட்டுள்ளதாகவும், சிலையை மாற்றியது தொடர்பாக எதிர்ப்பு தெரிவித்த கோயில் ஊழியர் சேகர் உட்பட பலரிடம் விசாரணை நடத்தவில்லை. எனவே,  விசாரணையில் சந்தேகம் இருப்பதாக ஒரு தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: