ஜிசாட் 29 செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்கான கவுண்ட் டவுன் துவங்கியது

சென்னை: ஜிசாட் 29 செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்கான கவுண்ட் டவுன் துவங்கியுள்ளது. முன்னதாக ஜிசாட்-29 செயற்கைகோள் திட்டமிட்டப்படி வரும் 14-ம் தேதி விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தகவல் தெரிவித்தது. நவம்பர் 14 அதாவது நாளை  மாலை 5.08 மணிக்கு ஜிஎஸ்எல்வி மாக்-3 விண்ணில் செலுத்தப்படுகிறது. 3,423 கிலோ எடை கொண்ட தகவல் தொழில்நுட்ப செயற்கைக்கோளான ஜிசாட் 29-ஐ இது எடுத்துச்செல்கிறது. வானிலை மாற்றம், கடல்சார் ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக ஜிசாட் 29 செயற்கைக்கோள் செலுத்தப்பட உள்ளது. மழை, புயல் காரணமாக ஏவப்படாது என செய்தி வெளியான நிலையில் ஜிசாட்-29 செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ள நிலையில், மதியம் 2.50 மணியளவில் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான் விண்வெளி நிலையத்தில் ஜிசாட் 29 செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்கான கவுண் டவுன் தொடங்கியது.

நாளை விண்ணில் செலுத்தப்பட உள்ள ஜிசாட் 29 செயற்கைக்கோளை உயர்நுணுக்கமான தகவல் தொடர்புக்காக இஸ்ரோ தயாரித்துள்ளது. ஜி.எஸ்.எஸ்.வி. மார்க் 3 டி2 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுகிறது. தொலை தூரத்தில் உள்ள தகவல் தொடர்பு தேவைகளை பூர்த்தி செய்வதற்கு Q/V என்ற நவீன தொழில்நுட்ப கேமிரா மற்றும் கருவிகள் இந்த செயற்கைகோளில் பொருத்தப்பட்டுள்ளது. நாளை மாலை 5 மணிக்கு மிதமான காலநிலை நிலவும் பட்சத்தில் இந்த செயற்கைகோள் விண்ணில் ஏவப்படும். இந்த செயற்கைகோள் மூலம் காஷ்மீர் மற்றும் வடகிழக்கு பிராந்திய மாநிலங்களில் டிஜிட்டல் இந்திய திட்டம் மூலம் விரைவாக இணையதள சேவையை பயன்படுத்த முடியும். இதன் ஆய்வுகாலம் 10 ஆண்டுகள் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: