ஐ.சி.சி. ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியல் வெளியீடு: விராட் கோலி, பும்ரா தொடர்ந்து முதலிடம்

மும்பை: ஐ.சி.சி. ஒருநாள் கிரிக்கெட் போட்டி வீரர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பேட்டிங்கில் முதல் பத்து இடங்களுக்குள் 3 இந்திய வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கில் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார். விராட் கோலி 899 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். இந்திய அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா 871 புள்ளிகளுடன் தொடர்ந்து இரண்டாவது இடத்தை தக்க வைத்துள்ளார். 9-வது இடத்தில் இருந்த தவான் 8-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார்.

பந்துவீச்சாளர்கள் பட்டியலிலும் முதல் 10 இடத்திற்குள் 3 இந்திய வீரர்கள் உள்ளனர். பும்ரா 841 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். குல்தீப் யாதவ் 3-வது இடத்தை தக்க வைத்துள்ளார். இரண்டாவது இடத்தில் இருந்த சாஹல் மூன்று இடங்கள் சறுக்கி 5-வது இடத்திற்கு தள்ளப்பட்டார். ஆல் ரவுண்டர் வரிசையில் 353 புள்ளிகளுடன் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் முதலிடத்தில் நீடிக்கிறார். ஆல்ரவுண்டர் வரிசையில் முதல் பத்து இடங்களுக்குள் இந்திய வீரர்கள் யாரும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: