நாகையிலிருந்து 790 கி.மீ தெலைவில் மையம் கொண்டுள்ளது 'கஜா' - வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்தை நோக்கி நெருங்கி வரும் கஜா புயல், தற்போது நாகையிலிருந்து 790 கி.மீ தெலைவில் மையம் கொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நவம்பர் 15-ம் தேதி பிற்பகல் கடலூர்-பாம்பன் இடையே இப்புயல் கரையை கடக்கும் என வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் 14-ம் தேதி இரவு முதல் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என்றார்.  கடலூர், நாகை, காரைக்கால், திருவாரூர், தஞ்சை, ராமநாதபுரத்தில் மழை பெய்யும் என்றார். கடந்த 24 மணி நேரமாக நிலையாக இருந்த புயல், தற்போது 12 கி.மீ வேகத்தில் தமிழகத்தை நோக்கி நகர்வதாக குறிப்பிட்டார்.

காலை 8 மணிக்கு கஜா புயலின் வேகம் 4 கி.மீ-ஆக இருந்த நிலையில், தற்போது மும்மடங்கு அதிகரித்து 12 கி.மீ வேகத்தில் தமிழகத்தை நோக்கி வருவதாக குறிப்பிட்டார். கடலூர், நாகை, காரைக்கால், திருவாரூர், தஞ்சை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறினார். புயல் கரையை கடக்கும் போது 90 - 100 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என எச்சரித்தார். மீனவர்கள் நவம்பர் 15 வரை மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார். சென்னைக்கு நேரடியான பாதிப்பு இருக்காது என்றும், ஆனால் மிதமானது முதல் பலத்த மழை பெய்யலாம் எனவும் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: