நவ.15 பிற்பகல் கஜா புயல் கரை கடக்கும் : இந்திய வானிலை மையம் தகவல்

டெல்லி: வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள கஜா புயல் மணிக்கு 4 கி.மீ வேகத்தில் மெதுவாக நகருகிறது. 7 கி.மீ., 5 கி.மீ. வேகத்தில் இருந்து கஜா புயல் 4 கி.மீ. வேகத்துக்கு குறைந்தது. நவம்பர் 14ம் தேதி 100 முதல் 125 கிமீ வேகத்தில் புயல் காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 3 நாளைக்கு முன் மணிக்கு 13 கிமீ வேகத்தில் கஜா புயல் நகர்ந்தது.

காலை நிலவரப்படி 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்த கஜா புயல் மணிக்கு 5 கி.மீ. வேகத்தில் நகர்கிறது என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.  புயலின் வேகம் மேலும் குறைந்தால் கரையைக் கடக்க தாமதமாகும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னைக்கு கிழக்கே 760 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. நாகைக்கு கிழக்கே - வடக்கே 850 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. கஜா புயல் வலுப்பெற்று இன்று மாலை தீவிர புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்தது.

இந்நிலையில் தற்போது நவம்பர் 15-ம் தேதி பிற்பகல் பாம்பன் மற்றும் கடலூர் இடையே புயல் கரை கடக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னைக்கு கிழக்கே 740 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. நாகைக்கு கிழக்கே - வடக்கே 830 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: