அரசின் இலவச திட்டங்கள் மக்களுக்கு தேவை... ஆனால் ஓட்டுக்காக இருக்கக்கூடாது... நடிகர் ரஜினிகாந்த்

சென்னை: 7 பேர் விடுதலை தொடர்பான கேள்விக்கு நடிகர் ரஜினிகாந்த் சென்னை போயஸ் தோட்ட  இல்லத்தில் விளக்கம் அளித்தார். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் பற்றி எனக்கு தெரியாது என்ற மாயையை சிலர் உருவாக்கி வருவதாகவும் நேற்று தன்னிடம் கேட்ட கேள்வி சிறிது தெளிவாக இல்லை என்றும், 7 பேர் விவகாரம் குறித்து ஒன்றுமே தெரியாத அளவுக்கு நான் முட்டாள் இல்லை என்றும் கூறினார். இதற்கிடையே எடுத்த எழுப்பிலேயே ஏழு பேர் என்று கேட்டதால் எந்த ஏழு பேர் என்று கேட்டதாக கூறினார். மேலும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்பதே தனது கருத்து என்று குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறியதாவது: பேரறிவாளன் பரோலில் வெளிவந்த போது அவரிடம் தொலைபேசியில் பேசினேன். பாஜக ஆபத்தான கட்சியா என்பதை நான் இப்போது கூற முடியாது அதை மக்கள் முடிவு செய்யட்டும். நான் இன்னும் முழுமையாக அரசியலில் இறங்கவில்லை, முழுமையாக இறங்கியதும் முழு பதில் சொல்வேன், என ரஜினிகாந்த் கூறினார். அரசின் இலவச திட்டங்கள் மக்களுக்கு தேவையானது தான், ஆனால் ஓட்டுக்காக இலவசம் என்பது இருக்கக்கூடாது என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மேலும் சர்கார் பட பேனர்களை கிழித்தது வன்மையாக கண்டிக்கடித்த்தக்கது எனவும் நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: