கஜா புயலை எதிர்கொள்ள 27 தேசிய பேரிடர் குழுவினர் கடலூர் வருகை

கடலூர்: கஜா புயல் காரணமாக மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணத்திலிருந்து 27 தேசிய பேரிடர் குழுவினர் இன்று காலை கடலூர் வந்தனர். மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்த கஜா புயல், காலை நிலவரப்படி மணிக்கு 5 கி.மீ. வேகத்தில் நகர்கிறது என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.  சென்னையில் இருந்து கிழக்கே 750 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகையில் இருந்து வடகிழக்கே 840 கிலோ மீட்டர் தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது. மேற்கு - தென்மேற்கு நோக்கி நகரும் கஜா, 15-ந்தேதி அதிதீவிர புயலாக வலுப்பெற்று பாம்பன் - கடலூர் இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளது’’ என்று தெரிவித்துள்ளது.

இதனால் கடலூர் மாவட்டத்துக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று கூறப்பட்ட நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்று காலை அரக்கோணத்திலிருந்து மூலம் 27 தேசிய பேரிடர் குழுவினர் கடலூர் வந்தனர். மஞ்சக்குப்பத்தில் உள்ள அண்ணா மைதானத்தில் அவர்கள் தங்கியுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் அதிகமாக வெள்ளத்தால் பாதிக்கப்படும் இடங்களை கண்டறிந்து அவர்கள் அங்கு அனுப்பப்படுவார்கள்.

கடலூர், புதுவை, நாகப்பட்டினம், காரைக்கால், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு 8 குழுக்களாக சென்றுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். படகுகள், லைட்டுகள் உள்ளிட்ட பல்வேறு தேவையான பொருட்கள் கொண்டு வந்துள்ளோம், புயலை எதிர்கொள்ள எங்கள் பேரிடர் மீட்பு குழுவினர் தயாராக உள்ளோம் எனவும் கடலூருக்கு வந்த தேசிய பேரிடர் மீட்பு குழு தெரிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: