சபரிமலை விவகாரம்: சீராய்வு மனுக்கள் மீது இன்று விசாரணை

திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு எதிரான சீராய்வு மனுக்கள் இன்று விசாரணைக்கு வருகின்றது. சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என சுப்ரீம் கோர்ட்டு 2 மாதங்களுக்கு முன்பு தீர்ப்பளித்தது. இதற்கு எதிராக கேரளாவில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. எனினும் கோர்ட்டு உத்தரவை அமல்படுத்துவதில் மாநில அரசு தீவிரமாக உள்ளது. இந்நிலையில் மாதந்திர பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலின் நடை சமீபத்தில் திறக்கப்பட்டது. கோவிலுக்கு செல்ல முயன்ற சில பெண்களை பக்தர்கள் தடுத்து திருப்பி அனுப்பினர்.

இதனால் ஐந்து நாட்களாக சபரிமலையில் பெரும் பரபரப்பும், பதற்றமும் நிலவியது. இந்நிலையில் சபரிமலை விவகாரம் தொடர்பாக அளிக்கப்பட்ட தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தேசிய அய்யப்ப பக்தர்கள் சங்கம் சார்பில் வழக்கறிஞர் மேத்யூஸ் நெடும்பரா உள்ளிட்டசிலர் சீராய்வுமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் இன்று (நவ.13) தலைமை நீதிபதி ரஞ்சன் கோகெய் தலைமையிலான நீதிபதிகள் முன் பிற்பகல் 3 மணிக்கு விசாரணைக்கு வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: