தமிழகத்தில் தொழில் துவங்குவோருக்கு 10 ஆண்டுக்கு விற்பனை வரி விலக்கு: கருத்தரங்கில் தகவல்

கோவை : தமிழகத்தில் தொழில் துவங்குவோருக்கு 10 ஆண்டுக்கு விற்பனை வரி விலக்கு அளிக்கப்படும் என கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது. தமிழக அரசின்  சார்பில் உலக முதலீட்டாளர் மாநாடு மற்றும் முதலீட்டாளர்களின்  தேர்வு வரும் ஜனவரி 23, 24 ஆகிய தேதிகளில் சென்னையில் நடக்கிறது. அது  குறித்த விளக்க கருத்தரங்கம் நேற்று கோவையில் நடந்தது. இதில் அமைச்சர்கள்  வேலுமணி, சம்பத், பெஞ்சமின்,  தொழில்துறை கூடுதல் முதன்மை செயலாளர்  ஞானதேசிகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில்  வழிகாட்டுதல் பிரிவு நிர்வாக துணை  தலைவர் வேல்முருகன் பேசியதாவது:  தமிழகத்தில் தொழில்  துவங்க முன்வருபவர்களுக்கு தொழிற்சாலைகள் அமைக்க இடம்  வழங்கப்படும். நிலத்திற்கான முத்திரைத்தாள் கட்டணம் 11 சதவீதத்தில் ஒரு  சதவீதம் மட்டுமே செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ரூ.350 கோடி முதல் ரூ.1,000 கோடி வரையிலான முதலீட்டை ‘மெகா  ப்ராஜக்ட்’ என்றும், ரூ.1,000 முதல் ரூ.2,000 கோடி முதலீட்டை ‘சூப்பர் மெகா ப்ராஜக்ட்’ என்றும், ரூ.2 ஆயிரம் கோடி முதல் ரூ.3  ஆயிரம் கோடி முதலீட்டை ‘அல்ட்ரா ப்ராஜக்ட்’ என்றும் வகைப்படுத்தியுள்ளோம்.  அதன்படி முதலீட்டாளர்கள் 3 முதல் 5 ஆண்டுக்குள் முதலீடு செய்தால்,  அவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு விற்பனை வரி விலக்கு அளிக்கப்படுகிறது.  தொழில்துறையினரின் விண்ணப்பங்கள் ஒற்றை சாளர முறையில்  பரிசீலித்து, 30 நாட்களுக்குள் அனுமதி வழங்கப்படும்  என்றார்.

ஒற்றை சாளர முறையில் 11 துறை இணைப்பு

மாநாட்டில் தொழில்துறை அமைச்சர் சம்பத் பேசுகையில், தமிழக தொழில் வர்த்தகம் எளிதாக்கும் சட்ட  விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளது. குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனத்தினர் 300 பேர் வரை விண்ணப்பித்து இருந்தனர். இவர்களில் 137 பேருக்கு ஒற்றை சாளர முறையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெரும் தொழில் துவங்க விண்ணப்பித்த 20 பேரில் 17 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் தொழில்துறை முதலீட்டை ஈர்க்க அமெரிக்கா, தைவான், ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டோம். ஆனால் காலதாமதமாக வந்ததால் பல லட்சம் கோடி முதலீடுகளை நாம் இழந்துவிட்டதாக அந்நாட்டு தொழில் துறையினர் தெரிவித்தனர். தொழில் துவங்க  விரைவாக அனுமதி கிடைக்க ஒற்றை சாளர முறையில் எளிதாக விண்ணப்பிக்க, 11  துறை இணைக்கப்பட்டுள்ளது என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: