பேரல் 70 டாலருக்கு கீழ் சரிவு கச்சா எண்ணெய் உற்பத்தியை மீண்டும் குறைக்க திட்டம்

புதுடெல்லி: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததால், உற்பத்தியை குறைக்க எண்ணெய் வள நாடுகள் திட்டமிட்டுள்ளன. சர்வதேச சந்தையில் பிரன்ட் கச்சா எண்ணெய் விலை கடந்த ஏப்ரல் மாதத்துக்கு பிறகு முதல் முறையாக 70 டாலருக்கு கீழ் சரிந்தது. நியூயார்க்கின் டபிள்யூடிஐ கச்சா எண்ணெய் 60 டாலருக்கு கீழ் குறைந்தது. இது 9 மாதங்களில் இல்லாத சரிவு என கூறப்படுகிறது. ஈரான் மீது அமெரிக்கா தடை விதித்துள்ள நிலையில், அங்கிருந்து இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் மட்டும் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய தற்காலிகமாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஈரான் தடையை கருத்தில் கொண்டு அமெரிக்கா கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்தியுள்ளது. இதுபோல் சவூதி அரேபியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளும் உற்பத்தியை அதிகரித்துள்ளன. இது கச்சா எண்ணெய் விலை சரிவுக்கு முக்கிய காரணமாகிவிட்டது.

 கடந்த 2014ம் ஆண்டு கச்சா எண்ணெய் விலை கடுமையாக சரிந்தது. இதை தொடர்ந்து எண்ணெய் வள நாடுகள் உற்பத்தியை குறைத்தன. தேவைக்கு ஏற்ப சப்ளை இல்லாததால் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்து வந்தது. மீண்டும் ஒரு பெரும் சரிவு ஏற்பட்டு விடக்கூடாது என்பதால் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க எண்ணெய் வள நாடுகள் திட்டமிட்டுள்ளன. இதுதொடர்பாக ஒபெக் நாடுகள் மட்டுமின்றி இந்த கூட்டமைப்பில் இல்லாத நாடுகளும் கச்சா எண்ணெய் உற்பத்தி குறைப்பு பற்றி ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஜூன் மாதத்தில் கச்சா எண்ெணய் விலை உச்சத்துக்கு சென்ற பிறகு எண்ணெய் நாடுகள் உற்பத்தியை அதிகரித்தன. உற்பத்தி குறைப்பது பற்றி வியன்னாவில் அடுத்த மாதம் நடைபெறும் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என தெரிகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: