25 நாளில் பெட்ரோல் ரூ.5.37 குறைந்தது

புதுடெல்லி: கடந்த 25 நாட்களில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.5.37, டீசல் ரூ.3.45 குறைந்தது. கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதால் பெட்ரோல், டீசல் விலையை கடந்த மாதம் 17ம் தேதி முதல் குறைத்து வருகின்றன. நேற்று வரை சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டருக்கு ரூ.5.34 குறைந்துள்ளது. கடந்த மாதம் ரூ.3.45, இந்த மாதம் நேற்று வரை ரூ.1.92 குறைந்துள்ளது.  சென்னையில் நேற்று பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.80.73க்கு விற்கப்பட்டது. இதுபோல், டீசல் விலை லிட்டருக்கு நேற்று வரை ரூ.3.45 குறைந்துள்ளது.

இதில் இந்த மாதம் மட்டும் ரூ.1.41 சரிந்துள்ளது. சென்னையில் நேற்று டீசல் ரூ.76.59க்கு விற்கப்பட்டது. பெட்ரோல் அளவுக்கு டீசல் விலை வேகமாக குறையவில்லை. சர்வதே சந்தையில் கச்சா எண்ணெய் பேரல் 70 டாலருக்கு கீழ் குறைந்துள்ளது. எண்ணெய் வள நாடுகள் மீண்டும் உற்பத்தி குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டால் விலை மீண்டும் உயரத்தொடங்கும் அபாயம் உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: