மோமினுல் 161, முஷ்பிகுர் 111* வங்கதேச அணி அபார ரன் குவிப்பு

தாக்கா: ஜிம்பாப்பே அணியுடனான 2வது டெஸ்ட் போட்டியில், மோமினுல் ஹக் - முஷ்பிகுர் ரகிம் ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் வங்கதேசம் 5 விக்கெட் இழப்புக்கு 303 ரன் குவித்துள்ளது. மிர்பூர் தேசிய ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாசில் வென்ற வங்கதேசம் முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர்கள் இம்ருல் கேயஸ் (0), லிட்டன் தாஸ் (9) ரன்னில் வெளியேற, அடுத்து வந்த முகமது மிதுன் டக் அவுட்டானார். வங்கதேச அணி 11.1 ஓவரில் 26 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து பரிதவித்த நிலையில், மோமினுல் - முஷ்பிகுர் இணை பொறுப்புடன் விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டது.

இவர்களைப் பிரிக்க முடியாமல் ஜிம்பாப்வே பந்துவீச்சாளர்கள் திணறினர். இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 266 ரன் சேர்த்து அசத்தியது. மோமினுல் 161 ரன் (247 பந்து, 19 பவுண்டரி) விளாசி பெவிலியன் திரும்ப, தைஜுல் இஸ்லாம் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 303 ரன் குவித்துள்ளது. முஷ்பிகுர் ரகிம் 111 ரன் (231 பந்து, 9 பவுண்டரி), கேப்டன் மகமதுல்லா (0) களத்தில் உள்ளனர். ஜிம்பாப்வே பந்துவீச்சில் ஜார்விஸ் 3, சதாரா, டிரிபானோ தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இன்று 2வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: