கடைசி டி20 போட்டியிலும் வெற்றி....... மேற்கிந்திய தீவுகள் அணியை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா

சென்னை: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டி-20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்திலும், லக்னோவில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் 71 ரன் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் இந்தியா- மேற்கிந்தியதீவு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம்  விளையாட்டு மைதானத்தில் இன்று நடைபெற்றது.

இப்போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியதீவுகள் அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் எடுத்தது. மேற்கிந்திய தீவுகள் அணியில் அதிகபட்சமாக பூரான் 53, டேரன் பிராவோ 43 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய சாஹல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனையடுத்து 182 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி களமிறங்கியது. கேப்டன் ரோகித் சர்மா 4 ரன்களிலும், ராகுல் 17 ரன்களிலும் ஆட்டமிழந்ததால் இந்திய அணி 45 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் தவானுடன் ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட் மேற்கிந்திய தீவுகள் அணியினரின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர்.

இருவரும் அதிரடியாக ஆடி அடுத்தடுத்து அரைசதம் கடந்தனர். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டியது. இந்திய அணி தரப்பில் சிறப்பாக ஆடிய தவான் 92 ரன்களையும், பண்ட் 58 ரன்களையும் விளாசினர். இதன்மூலம் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என கைப்பற்றி மேற்கிந்திய தீவுகள் அணியை ஒயிட் வாஷ் செய்தது. அதிரடியாக விளையாடி 92 ரன்கள் விளாசிய தவான் ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: