லஞ்ச புகார்: கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியை கைது செய்தது மத்தியக் குற்றப்பிரிவு போலீஸ்

பெங்களூரு: லஞ்சப் புகாரில் சிக்கிய கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியை மாநில மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். பிரபல நிதி நிறுனத்துக்கு எதிராக பொருளாதார அமலாக்கத்துறை நடத்தி வந்த விசாரணையில் இருந்து காப்பாற்ற அந்த நிதி நிறுவனத்திடம் இருந்து 18 கோடி ரூபாய் மதிப்பிலான 57 கிலோ தங்கக் கட்டிகளை லஞ்சமாக பெற்றதாக கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி மீது குற்றம் சுமத்தப்பட்டது.

கடந்த வெள்ளிக்கிழமை அவரது முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் மூன்று நாட்கள் தலைமறைவாக இருந்த ஜனார்த்தன ரெட்டி பெங்களூரு சாம்ராஜ் பேட் பகுதியில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் நேற்று மாலை ஆஜரானார். போலீசார் அவரிடம் விடிய,விடிய விசாரணை நடத்தி வந்தனர். விசாரணை 5 மணி நேரம் நீடித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இன்று மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரான ஜனார்த்தன ரெட்டியை அதிகாரிகள் கைது செய்தனர். மருத்துவப் பரிசோதனைக்குப் பின், கோரமங்கலாவில் உள்ள மாஜிஸ்ட்ரேட் வீட்டில் ஜனார்த்தன ரெட்டி ஆஜர்படுத்தப்பட்டார். இதனையடுத்து நவம்பர் 24-ம் தேதி வரை ஜனார்த்தன ரெட்டியை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னதாக ஜனார்த்தன ரெட்டியை விசாரணைக்கு ஆஜராகும்படி மத்திய  குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினர். இதையடுத்து, வீடியோ ஒன்றை வெளியிட்ட ஜனார்த்தன ரெட்டி, ‘போலீசாரின் சம்மன் கிடைத்தது. ஞாயிறன்று ஆஜராக சம்மன் அனுப்பியிருந்தாலும் சனிக்கிழமையே ஆஜராவதாகவும், தமக்கு தமக்கு எதிராக சதி செய்யும் அரசியல் அழுத்தங்களுக்கு காவல்துறை அடிபணியாது என நம்புவதாகவும் கூறி நான் நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பேன்’ என்று தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: