சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 2-வது முறையாக உயர்வு: பொதுமக்கள் கவலை

சென்னை: 2-வது முறையாக மானியத்துடன் வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை திடீரென எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளது பொதுமக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர்கள் முகவர்களுக்கு வழங்கப்படும் கமிஷன் தொகை உயர்த்தப்பட்டுள்ளது. இதைக் காரணமாக காட்டி எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு 2 ரூபாய் விலையை உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. கடந்த 1-ம் தேதி முதல் சிலிண்டர் விலையில் ரூ.2.94 காசு அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் 2 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த 10 நாட்களுக்குள் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.4.94 காசுகள் உயர்ந்துள்ளது. இந்த விலையேற்ற அறிவிப்பு நடுத்தர குடும்ப மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மானிய விலையில் வழங்கப்படும் 14.2 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டருக்கான விநியோகிஸ்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கமிஷன் தொகை உயர்த்தப்பட்டுள்ளது. எனவே தான் தற்போது எரிவாயு சிலிண்டர்கள் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது.

மேலும் கடந்த 2017-ம் ஆண்டு வரை 14.2 கிலோ சிலிண்டருக்கு கமிஷனாக ரூ.48.89 பைசா வழங்கப்பட்டு வந்தது. தற்போது அது 2 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதால், 14.2 கிலோ சிலிண்டர் ஒன்றுக்கு கமிஷனாக ரூ.50.58 பைசா வழங்கப்படும். இந்த விலை மாநிலங்களின் உள்ளூர் வரிகள், போக்குவரத்துக் கட்டணம் மற்றும் கூலி உள்ளிட்டவை சேர்க்கப்படும் போது மாறுபடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களின் அத்தியாவசிய தேவையான எரிவாயு சிலிண்டரின் விலை தற்போது மாறி மாறி ஏறிக்கொண்டே வருவதால் பொதுமக்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: