31 வங்கி சாரா நிதி நிறுவனம் இயங்க ரிசர்வ் வங்கி தடை

மும்பை: நாடு முழுவதும் வர்த்தக விதிமுறைகளில் தவறுசெய்த 31 நிதி நிறுவனங்கள் மற்றும் வீட்டுவசதி நிதி நிறுவனங்கள் இயங்க மத்திய ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. அரசு மற்றும் தனியார் வங்கிகள் அல்லாமல், பல்வேறு வங்கியல்லா நிதி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. வீட்டுக்கடன் உட்பட பல்வேறு கடன்களை தரும் இந்த நிதி நிறுவனங்கள் கடந்த காலங்களில்  எந்த  விதிமுறைகளுக்கும் உட்படாமல் இயங்கி வந்தன.

கடும் விதிகள் அமல்படுத்தப்பட்டு, வங்கி சாராத நிதி நிறுவனங்கள் இயங்குவது தொடர்பாக கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி விதித்தது. சமீப காலமாக இந்த நிதி நிறுவனங்கள் மீது தொடரந்து ரிசர்வ் வங்கி கண்காணிப்பை தீவிரப்படுத்தி வந்தது. இந்த நிலையில் 31 நிதி நிறுவனங்கள் இயங்க தடை விதித்து, அவற்றின் பதிவு உரிமத்தை ரத்து செய்தது.

லைசென்ஸ் ரத்தான நிதி நிறுவனங்களில் மேற்கு வங்க மாநிலத்தில் இயங்கி வந்த 27  நிதி நிறுவனங்கள் அடங்கும். அடுத்தபடியாக உபியை சேர்ந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது. இந்தியா முழுவதும் 12000 வங்கி சாரா நிதி நிறுவனங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: