ரூபாய் நோட்டு புழக்கம் சரிவு சிறிய பொருளுக்கும் கூட டிஜிட்டல் பரிமாற்றம் தான்

புதுடெல்லி: . சிறிய பொருள் வாங்க கூட பொதுமக்கள் டிஜிட்டல் முறையை பின்பற்றுகின்றனர் என்று மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார். கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8 ம்  ேததி 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பணமதிப்பு இழப்பு அறிவிக்கப்பட்டது. இதனால், பொதுமக்கள் பெரும் திண்டாட்டத்துக்கு தள்ளப்பட்டனர்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக டிஜிட்டல் முறை பண பரிமாற்றம் அதிகரித்துள்ளது என்று அமைச்சர் பெருமிதத்துடன் கூறியுள்ளார். ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது: கடந்த 2016ம் ஆண்டு 293 கோடி எண்ணிக்கையில் டிஜிட்டல் பண பரிமாற்றங்கள் நடந்துள்ளன. அதாவது, 103 சதவீதம் அளவுக்கு டிஜிட்டல் பரிமாற்றங்கள் அதிகரித்தது. 2017-18ல், அதாவது கடந்த ஆகஸ்ட் மாதம் வரை 580 கோடி பரிமாற்றங்கள் நடந்துள்ளன. இது கடந்தாண்டை விட 55 சதவீதம் அதிகம்.

ஆதார் அடிப்படையில் இயங்கும் பேமன்ட் முறைகள் பிரபலமாகி விட்டன. சிறிய அளவில் பொருட்கள் வாங்கினாலும், பண பரிமாற்றம் செய்வதாக இருந்தாலும் மக்கள் டிஜிட்டலுக்கு பழக்கப்பட்டு வருகின்றனர். அதே சமயம், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு போன்றவையும் மக்களிடம் அதிக செல்வாக்கை பெற்று வருகின்றன. இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: