ஏபிஎஸ் வசதியுடன் ராயல் என்பீல்டு கிளாசிக் 350

வரும் 2019 ஏப்ரல் மாதம் முதல் 125சிசி ரகத்திற்கு மேலான இருசக்கர வாகனங்களில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கட்டாயமாக்கப்பட இருக்கிறது. இதனை கருதில் கொண்டு, ராயல் என்பீல்டு நிறுவனம் தனது அனைத்து மாடல்களிலும் ஏபிஎஸ் பிரேக் வசதியை அளிப்பதில் மும்முரம் காட்டி வருகிறது. சமீபத்தில், ராயல் என்பீல்டு கிளாசிக் 350 சிக்னல்ஸ் எடிசனில் முதல்முறையாக ஏபிஎஸ் பிரேக் வசதியுடன் வந்தது. இந்நிலையில், கிளாசிக் 350 மாடலின் பிற வேரியண்ட்டுகளிலும் இப்போது ஏபிஎஸ் பிரேக் வசதியை அளிக்க துவங்கி இருக்கிறது ராயல் என்பீல்டு.  அந்த விதத்தில், தற்போது கிளாசிக் 350 மோட்டார் சைக்கிளின் கன் மெட்டல் கிரே எடிசன் மாடலிலும் டூயல் ஏபிஎஸ் பிரேக் வசதி அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

அதாவது, இரண்டு சக்கரங்களுமான ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த கிளாசிக் 350 கன் மெட்டல் கிரே எடிசனில் முன்சக்கரத்தில் டியூவல் பிஸ்டன் காலிபர் கொண்ட 280 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் ஒற்றை பிஸ்டன் காலிபர் கொண்ட 240 மிமீ டிஸ்க் பிரேக்கும் இடம்பெற்றிருக்கிறது. ராயல் என்பீல்டு கிளாசிக் 350 கன் மெட்டல் கிரே எடிசன் மாடலில் இருக்கும் 346 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் அதிகபட்சமாக 19.8 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த மோட்டார் சைக்கிளில் முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷனும், பின்புறத்தில் ட்வின் ஷாக் அப்சார்பர்களும் பொருத்தப்பட்டுள்ளன. வாடிக்கையாளர் மத்தியில் தனித்துவமான தேர்வாக இருக்கும் இந்த கன் மெட்டல் மாடலில் ஏபிஎஸ் வசதி அளிக்கப்படுவது வாடிக்கையாளர்களுக்கு மதிப்புமிக்க தேர்வாக மாறி இருக்கிறது. இந்த மாடலுக்கு 1.80 லட்சம் ஆன்ரோடு விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. சாதாரண கிளாசிக் 350 கன் மெட்டல் மாடலைவிட 10,000 கூடுதல் விலையில் இந்த ஏபிஎஸ் மாடல் விற்பனைக்கு வந்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: