உலகம் பலவிதம்

பாய்மரப் படகு போட்டி: ஸ்பெயினின் பார்சிலோனாவில் 50வது பாய்மரப் படகுப் போட்டி நடந்தது. இதில் பங்கேற்ற படகுகள், விக்டோரியா லைட் ஹவுசை கடந்து செல்கின்றன.

மராத்தான் திருமணம்:

அமெரிக்காவின் டெட்ராய்டில் நடந்த மராத்தான் ஓட்டத்தில் பங்கேற்ற காதல் ஜோடி வித்தியாசமான முறையில் திருமணம் செய்து கொண்டது. ஓட்டப்போட்டியை நிறைவு செய்த அவர்கள் அங்கேயே மோதிரம் மாற்றி  அனைவரின் ஆசியை பெற்றனர். திருமண பரிசாக முத்தத்தை பரிமாறும் புதுத்தம்பதியினர்.

ஜப்பான் பூங்கா:

ஜப்பானின் கத்சுதாவில் உள்ள ஹிட்டாசி பூங்காவில் கோடையையொட்டி சிவப்பு நிற புன்னை மரங்கள் ரம்மியமாக காட்சி அளிக்கின்றன. அழகிய பூங்காவை பார்வையாளர்கள் பார்த்து ரசிக்கின்றனர்.

அமெரிக்கா நோக்கி பேரணி:

மத்திய அமெரிக்க நாடான ஹான்டுரசை சேர்ந்தவர்கள் உட்பட 10,000 பேர் அகதிகளாக அமெரிக்கா நோக்கி பேரணியாக செல்கின்றனர். வறுமை, கொலை, கொள்ளை என கடும் பாதிப்பை சந்தித்துள்ள ஹான்டுரசை விட்டு  வெளியேறி உள்ள மக்கள் தங்களின் குழந்தைகளுடன் குடும்பம், குடும்பமாக இரவு, பகல் பாராமல் அமெரிக்கா நோக்கி நடக்கின்றனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தொடங்கிய இப்பேரணி மெக்சிகோவை அடைந்துள்ளது. சுமார்  4,500 கி.மீ. நடந்தே அமெரிக்காவை அடைந்து அங்கு குடியுரிமை பெறுவதே இப்பேரணியின் நோக்கம். ஆனால், அத்துமீறி அமெரிக்காவில் நுழைந்தால் ராணுவத்தை கொண்டு தாக்குதல் நடத்தப்படும் என அதிபர் டிரம்ப்  எச்சரித்துள்ளார். எனவே அமெரிக்க எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: