அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்த விஷயத்தில் திடீர் திருப்பம் மழைநீர் சேகரிப்பு திட்டத்தில் முறைகேடு: முத்தரசன் கண்டனம்

சென்னை: மழைநீர் சேகரிப்பு திட்டத்தில் நடக்கும் முறைகேட்டுக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: சிட்லப்பாக்கம் பேரூராட்சியில் ரூ17 கோடி மதிப்பிலான மழைநீர் சேகரிப்பு கால்வாய் திட்டம் அமைக்க தீர்மானிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக சிட்லபாக்கம் பேரூராட்சிக்கு 5 கோடி முதற்கட்டமாக ஒதுக்கியுள்ளனர். மொத்த வேலையும் பொதுப்பணித்துறைக்கு ஒதுக்கீடு செய்து வேலைகளை முடிக்காமல், டெண்டர் முன்னறிவுப்பும் அளிக்காமல் இந்த ஒதுக்கீட்டை அரசு செய்துள்ளது. இது ஊழலுக்கு மட்டுமே வழிவகுக்கும். இதனை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

 

இந்த முறைகேட்டை தடுத்து நிறுத்தக்கோரி பேரூராட்சியில் திரண்ட மக்கள் மற்றும் சிட்லபாக்கம் ரைஸிங் அமைப்பைச் சேர்ந்த இளைஞர்களை பேச்சுவார்த்தைக்கு என அழைத்து சென்ற காவல்துறையினர் அவர்கள் மீது பிரிவு 353 உட்பட 6 பொய்வழக்குகள் புனைந்துள்ளார்கள். இந்த பிரச்னையில் அரசு உடனடியாகத் தலையிட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் கான்ட்ராக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட இளைஞர்கள் மீது போடப்பட்டுள்ள பொய்வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்றும், இத்திட்டம் தொடர்பான ஒரு வெளிப்படையான அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் தமிழக அரசை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: