ஜோலார்பேட்டையில் பராமரிப்பு பணி ரயில் சேவையில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக அரக்கோணம், ஜோலார்பேட்டை ரயில்சேவையை மாற்றி தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: அரக்கோணம், ஜோலார் பேட்டை, திருப்பத்தூர் வழியில் 22 ம் தேதி முதல் நவ. 3ம் தேதி வரை தண்டவாள பராமரிப்பு பணி நடப்பதால், சில ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 22 ம் தேதி 12.05 மணிக்கு சென்ட்ரலில் இருந்து மங்களூர் வரை செல்லும் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ், ஜோலார்பேட்டையிலிருந்து 120 நிமிடம்  தாமதமாக புறப்படும். 20ம் தேதி மும்பையிலிருந்து புறப்பட்டு நாகர்கோவில் வரை செல்லும் மும்பை சிஎஸ்டி விரைவு ரயில், சோமநாயக்கன்பட்டியில் இருந்து 180 நிமிடம் தாமதமாக புறப்படும்.

22ம் தேதி மாலை 3.10 மணிக்கு ஜோலார் பேட்டையில் இருந்து புறப்படும் ஈரோடு பயணிகள் ரயில் 140 நிமிடம் தாமதமாக புறப்படும். 24 ம் தேதி சென்ட்ரலில் இருந்து பகல் 12.05 மணிக்கு புறப்படும்வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ், ஜோலார்பேட்டையிலிருந்து 120 நிமிடம் தாமதாமக புறப்படும்.24 ம் தேதி மாலை 2.15 மணிக்கு பெங்களூருரில் இருந்து புறப்பபடும் கேஎஸ்ஆர் பெங்களூரு கோவை உதய் விரைவு ரயில், சோமநாயக்கன் பேட்டையிலிருந்து 30 நிமிடங்கள் தாமதமாக புறப்படும் 24 ம் தேதி மதியம் 3.10 மணிக்கு புறப்படும் ஜோலார்பேட்டை ஈரோடு பயணிகள் ரயில், ( எண்:56111) 140 நிமிடங்கள் தாமதமாக புறப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: