ரூ50.08 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் ஜெயலலிதா நினைவிடம் பிப்.24ல் திறக்க முடிவு: பொதுப்பணித்துறை தகவல்

சென்னை: ரூ50.08 கோடி செலவில் அமைக்கப்பட்டு வரும் ஜெயலலிதா நினைவிட கட்டுமான பணியை விரைவில் முடித்து பிப்ரவரி 24ம் தேதியன்று திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 2016 டிசம்பர் 5ம் தேதி உயிரிழந்தார். இதை தொடர்ந்து, டிசம்பர் 6ம் தேதி அவரது உடல் எம்ஜிஆர் நினைவிடத்தின் பின்புறம் நல்லடக்கம் ெசய்யப்பட்டது. அந்த இடத்தில் ஜெயலலிதாவுக்கு ரூ50.08 கோடி மதிப்பில் நினைவிடம் கட்ட தமிழக அரசு முடிவு செய்தது. ஜெயலலிதா நினைவு மண்டப கட்டுமான பணி மேற்கொள்ள கிருஷ்ண மூர்த்தி அன் கோ நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது. கடந்த மே 7ம் தேதி ஜெயலலிதா நினைவிடம் கட்டுமான பணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். அன்றைய தினத்தில் இருந்து உடனடியாக கட்டுமான பணி தொடங்கப்பட்டது. தொடர்ந்து இரவு, பகலாக கட்டுமான பணி நடந்து வருகிறது.

பத்துக்கும் மேற்பட்ட பொக்லைன் இயந்திரங்கள், 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஷிப்ட் அடிப்படையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கட்டுமான பணியில் 10 பகுதி வேலையில் 6 பகுதி வேலை முடிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக, நடைபாதை, வாகன நிறுத்தம் அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது. அருங்காட்சியம், அறிவு சார் மையம் மேற்கூரை அமைக்கும் பணி நடக்கவிருக்கிறது. மெயின் கட்டிடத்தில் அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த கட்டிடத்தில் சூப்பர் ஸ்டெக்சர் அமைக்கப்படுகிறது. அதாவது, பீனிக்ஸ் பறவை தோற்றம் 15 மீட்டர் உயரத்தில் அமைக்கப்படுகிறது. இறக்கை மட்டும் 2 பக்கமும் 21 மீட்டர் வரை அமைக்கப்படுகிறது. இப்பணிக்கு ஐஐடி நிபுணர்கள் ஸ்டெக்சுரல் வடிவமைப்பு செய்து கொடுத்துள்ளனர். அந்த கட்டுமான பணிகள் மட்டும் ஐஐடி நிபுணர்களின் மேற்பார்வையில் அமைக்கப்படுகிறது.

இந்த கட்டுமான பணிகள் அனைத்தையும் ஜனவரி இறுதிக்குள் முழுமை அடையும் என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும், கூறும்போது ஜெயலலிதா பிறந்தநாளான பிப்ரவரி 24ம் ேததி நினைவிடத்தை திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதற்குள் அனைத்து பணிகளும் முழுவதுமாக முடிக்கப்பட்டு விடும்’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: