தலைமை நீதிபதியின் பாதுகாப்பில் குளறுபடி: துணை கமிஷனர் சஸ்பெண்ட்

கவுகாத்தி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பாதுகாப்பு வழங்கியதில் குளறுபடி நடந்ததால், கவுகாத்தி மேற்கு போலீஸ் துணை கமிஷனர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கடந்த வாரம் நடந்த நவராத்திரி விழாவை முன்னிட்டு  கடந்த 17ம் தேதி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், தனது மனைவியுடன், சொந்த மாநிலமான அசாமில் உள்ள கவுகாத்தி அடுத்த காமக்யா கோயிலுக்கு சென்றார். அப்போது, பாதுகாப்பு ஏற்பாடுகளில் நேர்ந்த  குளறுபடி காரணமாக, தலைமை ரஞ்சன் கோகோய் சாமியை வழிபாடு செய்வதில் இடைஞ்சல் மற்றும் குளறுபடி ஏற்பட்டது.

தலைமை நீதிபதியின் வருகை குறித்து, அசாம் மாநில கவர்னர் மற்றும் அரசுக்கு முன்னரே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்த போதும், அவருக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பில் குறைபாடு இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.  இவ்விவகாரம் தொடர்பாக, இந்திய பணிகள் சட்டத்தின் கீழ் கவுகாத்தி மேற்கு துணை கமிஷனர் பன்வார் லால் மீனா, சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக மாநில ஆளுநர் அலுவலகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், உள்துறை  செயலகத்தின் அதிகாரி தீபக் மாஜூம்தார் கையெழுத்திட்டுள்ளார். மேலும், அவர் உடனடியாக அசாம் மாநில காவல் துறைக்கு திரும்ப வேண்டும். அடுத்த உத்தரவு வரும்வரை பணியிடை நீக்கம் தொடரும். மேலதிகாரிகளின்  அனுமதியின்றி அவர் அசாம் மாநில காவல் தலைமையிடத்தை விட்டு வெளியே செல்லக்கூடாது என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: