மேட்டூர் அணை நீர்மட்டம் 104 அடியாக உயர்வு

மேட்டூர்:காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால், ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து, நேற்று முன்தினம் 27 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதனால் அருவிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க மற்றும் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இந்நிலையில், நேற்று காலை ஒகேனக்கல்லில் நீர்வரத்து 22,000 கனஅடியாக சரிந்தது. இதனை தொடர்ந்து, அருவிகளில் குளிக்க தடை நீக்கப்பட்டது. இதனால், ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்தும், பரிசலில் சவாரி செய்தும் மகிழ்ந்தனர்.

இதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 21 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை விநாடிக்கு 20,158 கனஅடியாக சரிந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசத்திற்கு 13 ஆயிரம் கனஅடிதண்ணீர் திறந்து விடப்படுகிறது. நேற்று முன்தினம் 104.07 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று காலை 104.47 அடியாக உயர்ந்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: