ஆம்னி பஸ்சில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டி

கரூர்: ஆம்னி பஸ்களில் கூடுதலாக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

கரூரில் நேற்று, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: போக்குவரத்து விதிகளின்படி ஆம்னி பஸ்களுக்கு என கட்டணம் நிர்ணயம் செய்யப்படவில்லை. சாதாரண நாட்களில் குறிப்பிட்ட கட்டணமும், பண்டிகை போன்ற நாட்களில் குறிப்பிட்ட அளவில்தான் கட்டணம் வசூல் செய்கின்றனர்.

இருப்பினும், ஆம்னி பஸ்களில் கட்டண வசூல் பொதுமக்களை பாதிக்கும் வகையில் இருந்தால் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், சென்னையில் எளிதான முறையில் போக்குவரத்து நடைபெறும் வகையில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மதுரை, நெல்லை, தஞ்சாவூர், திருச்சி போன்ற அனைத்து மாநகராட்சிகளிலும் குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படவுள்ளன. அரசு பஸ்களில் கட்டணம் அதிகரிக்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: