எஸ்.டி.பி.ஐ. கட்சியின் ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாடு:

சென்னை: திருச்சியில் நடைபெறும் ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாட்டில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அக் கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் அளித்த பேட்டி: இந்தியாவில் பழங்குடியினர், தலித்துகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் குறிப்பாக சிறுபான்மை முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் அரசியல் திட்டமிட்டு ஒதுக்கப்பட்டு புறக்கணிக்கப்படுகின்றனர். மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின் ஆர்.எஸ்.எஸ், இந்துத்துவ பயங்கரவாதத்தின் கருத்தாக்கமும், ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிரான வன்முறையும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. நாட்டின் ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கான உரிய பிரதிநிதித்துவம் இன்னும் வெற்றிடமாகவே உள்ளது. நிர்வாகக் கட்டமைப்பின் அனைத்துப் பரப்பிலும் மிகவும் ஒதுக்கப்பட்ட சமுதாயமாக முஸ்லிம்கள் இருக்கிறார்கள்; அவர்களுக்குரிய பிரதிநிதித்துவம் கொடுக்கப்படவில்லை. ஒடுக்கப்பட்டோரின் குரல்வளை நெறிக்கப்பட்டு எதிர்காலம் கேள்விக்குறியதாய் நிர்கதியாய் நிர்மூலமாகியிருக்கும் இச்சூழலில், அதிகாரம் அனைத்து தரப்பு மக்களுக்கும் பரவலாக்கப்பட வேண்டும், ஒடுக்கப்பட்ட சமூக மக்கள் அரசியல் அதிகாரம் பெற வேண்டும் என்ற அடிப்படையில் அரசியலாய் அணி திரள்வோம்! அதிகாரத்தை வென்றெடுப்போம்! என்ற முழக்கத்தோடு ஒடுக்கப்பட்ட அரசியல் எழுச்சி மாநாட்டை எஸ்.டி.பி.ஐ. கட்சி நடத்துகின்றது.

இன்று திருச்சி ஜி-கார்னரில் நடைபெறும் மாநாட்டில் கருத்தரங்கு நிகழ்ச்சிகள், பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் அரசியல் ஆளுமைகள், சமூக ஆர்வலர்கள், மனித உரிமைப் போராளிகள் கலந்துகொண்டு உரை நிகழ்த்துகின்றனர். மாநாட்டு பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய தலைவர் எம்.கே.ஃபைஜி, தேசிய துணைத் தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், விசிக தலைவர் திருமாவளவன், புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவரும் புதுவை மாநில பொதுப்பணித்துறை அமைச்சருமான நமச்சிவாயம், தமிழர் வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், ஆரிய சமாஜ் அமைப்பின் தலைவர் சுவாமி அக்னிவேஷ், அனைத்து விவசாய சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன், பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் முகமது இஸ்மாயில் நாம் அமைப்பின் நிறுவனர் ஜெகத் கஸ்பர், ஜமாத்துல் உலமா சபையின் முன்னாள் மாநில பொதுச்செயலாளர் டி.ஜே.எம். சலாஹுத்தின் ரியாஜி மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தலைவர்கள் உள்பட பலர் உரையாற்றுகின்றனர்.

ஒடுக்கப்பட்ட மக்கள் அரசியல் அதிகாரம் பெறுவதற்காக எஸ்.டி.பி.ஐ. கட்சி நடத்தும் ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாட்டில் அனைத்து ஒடுக்கப்பட்ட சமூக மக்களும் கலந்துகொண்டு மாநாட்டை வெற்றிபெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது கட்சியின் மாநில துணைத்தலைவர் அம்ஜத் பாஷா, பொதுச் செயலாளர் நிஜாம் முகைதீன், அப்துல் ஹமீது, அச.உமர் பாரூக், மாநில செயலாளர்கள் அமீர் ஹம்சா, ரத்தினம், அபுபக்கர் சித்திக், அகமது நவவி, மாநில பொருளாளர் வி.எம்.அபுதாஹிர் ,திருச்சி மாவட்ட தலைவர் ஹஸ்ஸான், பொதுச்செயலாளர் நியமத்துல்லா ஆகியோர் உடன் இருந்தனர். நாட்டின் ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கான உரிய பிரதிநிதித்துவம் இன்னும் வெற்றிடமாகவே உள்ளது. நிர்வாகக் கட்டமைப்பின் அனைத்துப் பரப்பிலும் மிகவும் ஒதுக்கப்பட்ட சமுதாயமாக முஸ்லிம்கள் இருக்கிறார்கள்; அவர்களுக்குரிய பிரதிநிதித்துவம் கொடுக்கப்படவில்லை.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: