பஞ்சாபில் ரயில் விபத்து அதிகாரிகள் அலட்சியமே காரணம்: சரத்குமார் குற்றச்சாட்டு

சென்னை : பஞ்சாபில் ரயில் விபத்திற்கு அதிகாரிகளின் அலட்சியப்போக்குதான் காரணம் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் குற்றச்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே, ஜோடா பதாக் என்னும் இடத்தில் கொண்டாடப்பட்ட தசரா திருவிழா நிகழ்ச்சியின் போது, இடப்பற்றாக்குறையால் தண்டவாளத்தில் இருந்து நிகழ்ச்சியை கண்ட பொதுமக்கள் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியும், வேதனையும் அளிப்பதாக உள்ளது. விழாவிற்கு வந்த பொதுமக்களின் எண்ணிக்கையையும், பாதுகாப்பையும் முன்னரே கணிக்காமல், விழா நடத்த அந்த இடத்திற்கு அனுமதி அளித்த அதிகாரிகள், இரயில்வே துறை அதிகாரிகள், பஞ்சாப் மாநில அரசு மற்றும் விழா ஏற்பாட்டாளர்கள் ஆகியோரின் மெத்தனப்போக்கே இந்த விபத்திற்கான முக்கிய காரணம். பொறுப்பற்ற தன்மையுடன் பணிபுரிந்த அதிகாரிகளையும், இவ்விபத்திற்கு காரணமானவர்களையும் வன்மையாக கண்டிப்பதுடன்,  இவ்விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டு, படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைந்து குணம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்.

உயிரிழப்பிற்கும், நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதற்கும் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. ரூ.10 லட்சம் இழப்பீடு: பஞ்சாப் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ரயில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சம் நிவாரண உதவி வழங்குவதாக பஞசாப் அரசு அறிவித்துள்ளது. மேலும் காயமடைந்தவர்களை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்திருப்பது பாராட்டுதலுக்குறியது. மத்திய அரசு இறந்தவர்களின் குடும்ங்களுக்கு தலா ரூ.10 லட்சமும்,மருத்துமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு தலா ரூ.5 லட்சமும் உதவியை உடனடியாக வழங்கிட வேண்டும். மேலும் இந்த விபத்து குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’’ என கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: