பழைய பஸ் பாஸூக்கு காலக்கெடு 31ம் தேதி வரை நீட்டிப்பு மாணவர்களுக்கு புதிய பஸ் பாஸ் வழங்குவது எப்போது?

வேலூர்:  தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச பஸ் பாஸ் அச்சடிக்க காலதாமதம் ஏற்பட்டுள்ளதால் பழைய பஸ் பாஸை இம்மாத இறுதி வரை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள், சீருடைகள் மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கப்படுகிறது. படிக்கும் மாணவர்கள் அரசு பஸ்சில் பயணம் செய்யும் வகையில் ஆண்டுதோறும் இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு கடந்த ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. புதிய பஸ் பாஸ் வழங்கும் வரை மாணவர்கள் ஆகஸ்ட் 31ம் தேதி வரை பழைய பஸ் பாசை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று என்று அரசு அறிவித்தது. தமிழகத்தில் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் 2.5 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு மட்டுமே இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் 80 சதவீதம் மாணவ, மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கவில்லை. ஆனால் பள்ளிகள் திறந்து நான்கு மாதங்கள் முடிந்த நிலையிலும், ஏராளமான மாணவர்களுக்கு இதுவரை பஸ் பாஸ் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பள்ளி கல்வித்துறை அதிகாரிகளிடமிருந்து மாணவர்களின் முழு விவரங்கள் இலவச பஸ் பாஸ் வழங்குவதற்கான விண்ணப்பங்கள் போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் முழுவதும் சேரவில்லை. ஒரு சில பள்ளிகளில் இருந்து குறைந்த அளவிலான விண்ணப்பங்கள் மட்டுமே வந்துள்ளது.

 குறைவான பஸ் பாஸ் அச்சடிப்பதற்கான செலவு அதிகம் என்பதால், மொத்தமாக விண்ணப்பங்கள் பெறப்பட்ட பின்னரே புதிய பஸ் பாஸ் அச்சடிப்பதற்கான நடவடிக்கை எடுக்க உள்ளதாக போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் புதிய பஸ் பாஸ் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் பழைய பஸ் பாஸ் இம்மாத இறுதி வரை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் பள்ளி சீருடையுடன் வரும் மாணவர்களிடம் டிக்கெட் வாங்க தேவையில்லை என்று போக்குவரத்து ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, `இலவச பஸ் பாஸூக்கான மாணவர்கள் விவரங்களை பெற்று போக்குவரத்துத்துறையிடம் ஒப்படைக்க இன்னும் ஒருமாதம் காலநீட்டிப்பு செய்துள்ளது அரசு. இதனால் பழைய பஸ் பாஸை வருகிற 31ம் தேதி வரை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அரசு பள்ளிக்கல்வி மற்றும் போக்குவரத்துத்துறைக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. எனவே இலவச பஸ் பாஸ் வழங்கும் நடவடிக்கை விரைந்து முடிக்கப்படும்’’’’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: