மதச் சடங்குகளில் தலையிடுவதில் நீதிமன்றங்கள் சுயக்கட்டுப்பாட்டுடன் செயல்படவேண்டியது அவசியம் : உயர்நீதிமன்றம் கருத்து

சென்னை : மதச் சடங்குகளில் தலையிடுவதில் நீதிமன்றங்கள் சுயக்கட்டுப்பாட்டுடன் செயல்படவேண்டியது அவசியம் என்று ஸ்ரீரங்கம் 12-வது பீடாதிபதியாக ஸ்ரீ யமுனாச்சாரியாருக்கு எதிரான வழக்கில் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ஸ்ரீரங்கம் கோவில் உள்ள ஸ்ரீமத் ஆண்டவர் ஆசிரமத்தின் 11-வது மடாதிபதி சமீபத்தில் உயிரிழந்தார். அவரது மரணத்தை அடுத்து 12-வது பட்டம் ஜீயர் ஸ்வாமிகளாக, ஶ்ரீமான் யமுனாசார்யார் ஸ்வாமி (11-வது ஜீயர் ஸ்வாமிகளின் திருக்குமாரர் ) ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆஸ்ரமத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மயிலை வெங்கடவரதன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். அவரது மனுவில், 11-வது மடாதிபதி தான் இறப்பதற்கு முன்னால் அடுத்த மடாதிபதியாக 3 பேரை தேர்வு செய்து இருந்ததாக உயிலில் குறிப்பிட்டிருப்பதாகவும், அந்த மூவரில் இல்லாத யமுனாச்சாரியாரை நியமனம் செய்ததை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து இருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், யமுனாச்சாரியாரின் நியமனத்தை ரத்து செய்ய முடியாது என்று உத்தரவிட்டுள்ளது, மேலும், மதச் சடங்குகளில் தலையிடுவதில் நீதிமன்றங்கள் சுயக்கட்டுப்பாட்டுடன் செயல்படவேண்டியது அவசியம் என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆஸ்ரமத்துக்கு புதிய தலைவர் நாளை  21 - ம் தேதி பதவி ஏற்க உள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: