தஞ்சை பெரிய கோவிலில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் திடீர் ஆய்வு

தஞ்சை : தஞ்சை பெரிய கோயிலில் முருகன் சன்னதியில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.பெரிய கோயிலில் சதய விழா நடைபெற்று வரும் நிலையில் ஆய்வால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பழமையான சிலைகளுக்கு பதில் புதிய சிலைகள் மாற்றப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. இந்த புகாரை அடுத்து சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் 4-வது முறையாக சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தஞ்சை பெரிய கோயிலில் சிலைகள் வைக்கப்பட்டிருந்த அறையில் பொன்.மாணிக்கவேல் ஆய்வு நடத்தினார். அந்த ஆய்வின்போது, சில சிலைகள் மாற்றப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அவர் கூறியிருந்தார். மேலும், தஞ்சை அருகே புன்னைநல்லூரில் உள்ள சிவன் கோயிலிலும் சிலைகள் வைக்கப்பட்ட அறையில் பொன்.மாணிக்கவேல் நடத்திய ஆய்வில், அங்கும் சுமார் 10 சிலைகள் மாற்றப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, குஜராத் மாநிலத்தில் உள்ள அருங்காட்சியகத்திலிருந்து ராஜராஜன் மற்றும் உலகமாதேவி சிலைகள் மீட்கப்பட்டது.

சமீபத்தில் சென்னையில் ரன்வீர் ஷாவின் வீட்டில் மீட்கப்பட்ட சிலைகள் மற்றும் தூண்கள் போன்றவை சோழர் காலத்தை சேர்ந்தவை என்று கருதப்படுதால்,சோழர்கள் ஆட்சி செய்த தஞ்சையில் உள்ள பெரிய கோவிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் ஆய்வு செய்தனர். ரன்வீர் ஷா வீட்டில் கைப்பற்றட்ட சிலைகள் மற்றும் கலைப்படைப்புகள் எதுவும் தஞ்சை பெரியகோவிலில் இருந்து கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் தொடர்ந்து பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழு பெரிய கோவிலில் திடீர் ஆய்வு நடத்தினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: