குற்றச்சாட்டுகளுக்கு முதல்வர் பதிலளிக்க வேண்டும்: திருநாவுக்கரசர் பேட்டி

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், சென்னையில் இருந்து நேற்று காலை 7.45 மணிக்கு விமானம் மூலம் மதுரை புறப்பட்டு சென்றார். முன்னதாக அவர், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:  இலங்கையில் தமிழக மீனவர்களை தாக்குவது, சிறைப்பிடிப்பது தொடர்ந்து நடக்கிறது. பாஜ ஆட்சியில், 150க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள் மீட்கப்படாத நிலை உள்ளது. மத்திய, மாநில அரசுகள், மீனவர்கள் பிரச்னையில் அலட்சியம் காட்ட கூடாது. சபரிமலை விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பு மதிக்கப்பட வேண்டும். பெண்களுக்கு சமஉரிமை வேண்டும். சம்பிரதாயம் பாதிக்கப்படுகிறது என்று நினைத்தால் நீதிமன்றத்தை நாடி நிவாரணம் பெற வேண்டும். அதை விடுத்து, வன்முறையில் ஈடுபடுவது, பெண்களையும் பத்திரிகையாளர்களையும் தாக்குவது சரியானதல்ல.

திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை ஆளுங்கட்சி மிரட்டுவது சரியான செயல் அல்ல. எடப்பாடி பழனிசாமி மீது சிபிஐ விசாரித்து 3 மாதத்திற்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதற்கு மதிப்பளித்து முதல்வர் மற்றும் அமைச்சர்கள், தங்களது குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க வேண்டும். அதை விடுத்து, ஆளுங்கட்சியினர், குறிப்பாக அமைச்சர்கள், எதிர்க்கட்சியான திமுகவையும், காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற கட்சிகளையும் மிரட்டுவது ஏற்று கொள்ள முடியாது. இவர்களது மிரட்டும் போக்கினால், தங்களது தவறுகளில் இருந்து தப்பித்துக்கொள்ள முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: