இலங்கை அரசின் கொடூர சட்டப்பிடியில் இருந்து தமிழக மீனவர்களை காப்பாற்ற வேண்டும்: டிடிவி.தினகரன் வலியுறுத்தல்

சென்னை: இலங்கை அரசின் வெளிநாட்டு மீன்பிடி படகுகள் ஒழுங்குபடுத்துதல் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள தூத்துக்குடியைச் சார்ந்த 8 மீனவர்களை காப்பாற்ற வேண்டும் என அமமுக துணை பொதுசெயலாளர் டிடிவி.தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: இலங்கை அரசு, வெளிநாட்டு மீன் பிடி படகுகள் ஒழுங்குபடுத்துதல் சட்டத்தின் கீழ் தூத்துக்குடி மீனவர்கள் 8 பேரை கைது செய்து, கடும் அபராதம் விதித்துள்ளது. மீனவர்களுக்கு பாதுகாப்பு தராமல் மத்திய, மாநில அரசு விலகி நின்று வேடிக்கை பார்க்கிறது. பழனிசாமியின் அரசு ஆரம்பத்திலேயே இதில் எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் மீனவர்கள் வாழ்வில் இப்போது பெரும் பாதகம் ஏற்பட்டுள்ளது. தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள தூத்துக்குடியை சேர்ந்த 8 மீனவர்களையும், மத்திய அரசிற்கு உரிய அழுத்தம் கொடுத்து, இலங்கை அரசின் இக்கொடூர சட்ட பிடியிலிருந்து காப்பாற்றிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: